மேலும் அறிய
Politicians Condolence to Marimuthu : சீமான் முதல் உதயநிதி வரை.. மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்த அரசியல்வாதிகள்!
Politicians Condolence to Marimuthu : ‘ஏய் இந்தாம்மா’ என்ற ஒரே வசனத்தினால் ஃபேமஸான நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பல அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீமான் - உதயநிதி
1/6

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “அப்பா மணிவண்ணன் போல பன்முக திறன் கொண்ட கலைஞராக மென்மேலும் மிளிர்வார் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது. நான் அரசியல்துறைக்கு வந்துவிட்ட பிறகும், பல நேர்காணல்களில் என்மீதான பேரன்பினை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்திய அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
2/6

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
Published at : 08 Sep 2023 04:46 PM (IST)
மேலும் படிக்க





















