மேலும் அறிய
Anirudh Birthday Special : ‘வந்த இடம் என் காடு..’ ராக்ஸ்டார் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் ட்ரெண்டிங் இசையமைப்பாளர் அனிருத்துக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

அனிருத் ரவிச்சந்தர்
1/6

லதா ரஜினிகாந்தின் தம்பி மகனான அனிருத் லயோலா கல்லூரியில் படிக்கும் போதே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

3 படத்தின் ஆல்பத்தில் உள்ள, “ஒய் திஸ் கொலவெறி டி” பாடல், யூடியூபில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
3/6

இசை உலகில் ஜொலிக்க, பல விஷயங்களை கற்றுக்கொண்டார் அனிருத். லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ கற்றுக்கொண்ட பின், சென்னையில் சவுண்ட் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார்.
4/6

அதனை தொடர்ந்து எதிர் நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை, மாறி, நானும் ரெளடிதான், வேதாளம், தங்க மகன், ரெமோ, விவேகம், தானா சேர்ந்த கூட்டம், பேட்ட, தாராள பிரபு, மாஸ்டர், டாக்டர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ஜவான் ஆகிய படங்களுக்கு தன் இசையால் வலு சேர்த்தார். அத்துடன் இவர் இசையில் உருவான லியோ வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
5/6

இந்தியன் 2, விடாமுயற்சி, தேவாரா, தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்களை கைவசத்தில் வைத்துள்ளார்.
6/6

மனதை லேசாக்கும் ரொமாண்டிக் பாடல்கள், காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு சூப் சாங், குடும்ப உறவினர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் செண்டிமெண்ட் பாடல்கள், திரையரங்குகளை அலறவிடும் பின்னணி இசை என அனைத்திலும் கலக்கி மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைக்கும் அனிருத் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
Published at : 16 Oct 2023 12:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement