மேலும் அறிய
Naa Ready Vs Kaavaala : லியோவின் ‘நா ரெடி’ பாடலை பின்னுக்கு தள்ளிய ஜெயிலரின் ‘காவாலா’!
Naa Ready Vs Kaavaala : அனிருத் இசையமைப்பில் உருவான காவாலா பாடல், நான் ரெடி பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.

நான் ரெடி -காவாலா
1/6

வெளியாகிய பின் அனைவரும் ‘டவுன் ட ட டவுன்..’என வைப் செய்ய தொடங்கினர். விஜய்யின் மற்ற பாடல்களை போல் இதுவும் வெளியான சில மணி நேரங்களில் மில்லயன் கணக்கான பார்வைகளை பெற்றது.
2/6

அதன் பின், ஜெயிலர் படத்திலிருந்து முதல் சிங்கிளான காவாலா வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வந்தது. இப்பாடலையும் லியோவின் இசையமைப்பாளரான அனிருதே இசையமைப்பதால், எதிர்ப்பார்ப்பு எகிறியது.
3/6

காவாலா முதலில் எங்கோ கேட்டது போல் உள்ளது என்றும் இது சக்கீராவின் பாடல் போல் இருக்கிறது என்ற சொன்ன அதே மக்கள்தான் ஜெயிலரின் முதல் சிங்கிளை உலகெங்கும் ஹிட்டாக்க செய்தனர். தமன்னாவின் ரீல்ஸ் ட்ரெண்டாக, நீண்ட நாட்களுக்கு காவாலா வைரல் லிஸ்டில் இருந்து இறங்காமல் இருந்தது.
4/6

பின்னர் ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும், ஜு ஜு பி ஆகிய பாடல்கள் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டன.
5/6

இதனை தொடர்ந்து நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் ரத்தமாறே என்ற நான்காவது பாடலுடன் முத்துவேல் பாண்டியன் தீம், ஜெயிலர் ட்ரில், ஜெயிலர் தீம், அலப்பர தீம் ஆகிய நான்கு தீம் மியூசிக் வெளியிடப்பட்டது.
6/6

இந்நிலையில், ஜூன் 22 ஆம் தேதி வெளியான லியோவின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடலை, ஜூலை 6 ஆம் தேதி வெளியான ஜெயிலரின் காவாலா அதிக பார்வைகளை பெற்று பின்னுக்கு தள்ளியுள்ளது.
Published at : 29 Jul 2023 12:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement