மேலும் அறிய
Isai Vani: 'ஐ ஆம் சாரி ஐயப்பா' பாடலை பாடி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் இசைவாணி!
கானா பாடகியும், பிக்பாஸ் பிரபலமுமான இசைவாணி தற்போது ஐயப்ப பாடலால் சர்ச்சையில் சிக்கி விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார்.
ஐயப்பன் பாடலால் சர்ச்சையில் சிக்கிய இசைவாணி
1/6

சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் கானா பாடகி இசைவாணி. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிங்கிங் ஸ்டார்ஸ் மூலமாக தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழர்களே தமிழர்களே மற்றும் வணக்கம் தமிழா நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசைவாணி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட 49 நாட்கள் தாக்குப்பிடித்தார்.
2/6

இந்நிகழ்ச்சியின் மூலமாக எல்லோராலும் அறியும் ஒரு கானா பாடகியாக வலம் வந்தார். இந்த நிலையில் தான் ஐயப்பன் பற்றி இவர் பாடிய பாடலால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பொதுவாக கார்த்திகை மற்றும் மார்கழியில் ஐயப்பன் மற்றும் முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இதில், சபரிமலைக்கு பெண்கள் செல்லக் கூடாது ஒரு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் சபரிமலைக்கு என்று சில கதைகளும், கட்டுப்பாடுகளும், சடங்குகளும் பின்பற்றப்படுகிறது. பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு ஐயப்பனை காண வருவார்கள்.
Published at : 22 Nov 2024 10:14 PM (IST)
மேலும் படிக்க





















