மேலும் அறிய
ஐந்து பாடல்களுக்கு 75 கோடி..அணு அணுவாய் செதுக்கிய ஷங்கர்..அப்படி என்ன ஸ்பெஷல் ?
கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில் ஒவ்வொரு பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

கேம் சேஞ்சர், ஷங்கர் , ராம் சரண் , தமன் ,
1/6

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் , கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு மட்டுமே ரூ 75 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில் ஒவ்வொரு பாடல் உருவாக்கப் பட்ட விதம் பற்றி பார்க்கலாம்
2/6

கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியான முதல் பாடல் 'ஜரகண்டி'. சுமார் 70 அடி உயரத்திற்கு மலைகிராமம் போல் செட் அமைக்கப்பட்டு 13 நாட்கள் இப்பாடல் எடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 600 டான்ஸர்களைக் கொண்டு இந்த பாடல் படம்பிடிக்கப்பட்டது. பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் கற்பித்துள்ளார். மேலும் இப்பாடலில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சணலால் உருவாக்கப்பட்டவை.
3/6

இரண்டாவது பாடலான 'ரா வச்சா' பாடல் இந்திய நாட்டுப்புற கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பாடல். சுமார் 1000 நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. குஸ்ஸாடி - அடிலாபாத்; கொம்மு கோயா மற்றும் தப்பெட்டா குல்லு (ஏபி) , சாவ் - மேற்கு வங்காளம் , கும்ரா - ஒரிசா - மாடிகல , கோரவரா - குனிதா (கர்நாடகா) , கும்முக்கோயா – ஸ்ரீகாகுளம் , ரணபா - ஒரிசா , பைகா - ஜார்கண்ட் , ஹலக்கி - வொக்கலிகா - கர்நாடகா, தபித குல்லு - விஜயநகரம், துருவா - ஒரிசா என பத்து பிரதேசங்களைச் சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞர்கள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளார்கள்
4/6

லைரானா - இந்தியாவில் முதல் முறையாக இன்ஃப்ரா ரெட் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட பாட்டு லைரானா. பல்வேறு விதமான வண்ணங்களை துல்லியமாக படம்பிடிப்பது இந்த கேமராவின் சிறப்பம்ஸம். மேலும் இந்த பாடலுக்கு இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். நியூசிலாந்தில் ஆறு நாட்கள் இப்பாடல் படம்பிடிக்கப்பட்டது.
5/6

சமீபத்தில் வெளியாகி பலரை கவர்ந்த பாடல் தொப். கோவிட் இரண்டாம் கட்ட லாக்டவுனில் இப்பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஷ்யாவில் இருந்து 100 டான்ஸர்கள் இப்பாடலுக்காக வரவழைக்கப்பட்டார்கள்.
6/6

கேம் சேஞ்சர் படத்தில் ஐந்தாவது பாடலை படக்குழு வெளியிடாமல் சர்ப்ரைஸாக வைத்துள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் பார்த்து பெரிய திரையில் அனுபவிப்பதற்காக இந்த பாடல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Published at : 04 Jan 2025 04:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion