IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA 5th T20: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

IND Vs SA 5th T20: நடப்பாண்டின் கடைசி போட்டியில் இந்திய அணி வென்று, இந்த டி20 தொடரை கைப்பற்றுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா - தென்னாப்ரிக்கா 4வது டி20:
இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வென்று இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து கடந்த 17ம் தேதி லக்னோவில் நடைபெறவிருந்த நான்காவது போட்டி, மோசமான காற்றின் தரம் மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவின் காரணமாக கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றுமா? அல்லது தென்னாப்ரிக்கா அணி சமன் செய்யுமா? என்பதை உறுதி செய்வதற்கான கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஆண்டின் கடைசி தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி, டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றாலும், ஒருநாள் தொடரில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான், நடப்பாண்டின் கடைசி கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இன்று இந்திய அணி களமிறங்குகிறது. எனவே, இந்திய அணி இந்த போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றி ஆண்டை வெற்றிகரமானதாக முடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
கில் அவுட் - சஞ்சு இன்:
இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை பெற்று வந்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங்கில் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. இந்நிலையில் தான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சுப்மன் கில் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சீரிஸ் டிசைடரில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுப்பெற்றுள்ளது. பவுலிங் யூனிட்டில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த தொடரின் மூலம் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்ட்யாவும் இன்றைய போட்டியில் முக்கிய பங்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத் மைதானம் எப்படி?
அண்மையில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சையது முஷ்டக் அலி தொடரின் பகல் நேர போட்டிகளில், பேட்ஸ்மேன்கள் சற்றே கூடுதல் ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலையில் இன்றைய போட்டி இரவு நேரத்தில் நடப்பதால், பனிப்பொழிவின் தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரன்கள் மழையாக பொழிய வாய்ப்புள்ளது. தென்னாப்ரிக்கா அணி மிகவும் ஆழமான மற்றும் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருப்பதால், அவர்களை சமாளிக்க இந்திய அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
உத்தேச ப்ளேயிங் லெவன்:
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (வி.கே.), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்ரிக்கா: குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்.), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்/ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே/கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி/கார்பின் போஸ்ச், ஆட்னீல் பார்ட்ஜே, ஆட்னீல் பார்ட்ஜே.




















