மேலும் அறிய
Fahadh Faasil Car : கேரளாவில் இந்த மாடல் காரை வாங்கும் நபரும் முதல் நபர் ஃபஹத்தானாம்!
Fahadh Faasil Car : கேரளாவில் இந்த ரகக் காரை, முதலில் வாங்கிய நபர் ஃபஹத்தான் என விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

புது கார் வாங்கிய ஃபஹத் பாசில்
1/6

2002 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வரும் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியாவை மணந்த பின்னர்தான் பிரபலமானார். ‘இவரை நஸ்ரியா மணந்து கொண்டாரா? ச்சா..’என்று நம்மில் பலர் சலிப்பு தட்டி இருப்போம்.
2/6

பின் தமிழ் சினிமாவில் வேலைக்காரன் மூலம் அறிமுகமானார். பின், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். மலையாளத்தில் சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனிற்கு வில்லனாக நடித்து அசத்தினார்.
3/6

இப்படிபட்ட ஃபஹதிற்கு லாட்டரியில் விழும் பம்பர் பரிசு போல் அமைந்தது லோக்கியின் விக்ரம். அன்றிலிருந்து இவருக்கான ஹைப் விண்ணை முட்டும் அளவிற்கு எகிறியது. அன்று முதல் ‘நடிப்பு அரக்கன் ஃபஹத்’, ‘கண்ணிலே நடிக்கிறார் ஃபஹத்’என மக்கள் போற்றத் தொடங்கினர்.
4/6

சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இரத்தின வேலு கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மாரி செல்வராஜின் படத்தில் இருந்த மற்ற கதாபாத்திரங்களை விட ஃபஹத்தின் கதாபாத்திரம் செம ரீச்சானது. சாதியவாதிகள், முட்டாள் தனமான ரெத்தின வேலு கதாபாத்திரத்தை கொண்டாட ஆரம்பித்தனர். சிலர், “இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தை ஃபஹத்திடம் கொடுத்து விடாதீர்கள். அப்படி கொடுத்தால் தவறான எடுத்துக்காட்டாக இருக்கும் ஃபஹத் கதாபாத்திரத்தை மக்கள் மெய் மறந்து ஏற்றுக்கொள்வார்கள்.”என பதிவிட்டனர்.
5/6

முன்பெல்லாம் நஸ்ரியாவை மணக்க ஃபஹத் கொடுத்து வைத்துள்ளார் என்று சொன்ன கும்பல், ஃபஹத்தை மணக்க நஸ்ரியாதான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என தோசைக்கல்லை திருப்பி போட்டு விட்டனர்.
6/6

ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஃபஹத், லேண்ட் ரோவரின் டிஃபெண்டர் காரை புதிதாக வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த ரகக் காரை, முதலில் வாங்கிய நபர் ஃபஹத்தான் என விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published at : 01 Sep 2023 05:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement