மேலும் அறிய
Chris Evans Marriage : 26 வயது இளம் பெண்ணை மணந்த கேப்டன் அமெரிக்கா நடிகர்!
Chris Evans Marriage : இவர்களின் திருமண நிகழ்ச்சியில், மார்வெல் நடிகர்களான ராபர்ட் டௌனே ஜே ஆர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜான் கிரசின்சுகி மற்றும் எமிலி பிளண்ட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மனைவியுடன் கிறிஸ் எவன்ஸ்
1/6

அமெரிக்க நடிகர் கிறிஸ் எவான்ஸை பலருக்கும் பிடிக்கும். அதிலும் இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.
2/6

ஃபெண்டாஸ்டிக் ஃபோர், கேப்டன் அமெரிக்கா : தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர், அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆட் அல்ட்ரான், ஆண்ட் மேன், கேப்டன் அமெரிக்கா : சிவில் வார், ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங், அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
3/6

கடந்த 2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், போர்த்துகீசிய நடிகையான அல்பா பாப்டிஸ்டாவை நீண்ட நாளாக காதலித்து வருவதாக அறிவித்தார். இவர்களின் காதல் டைம் பாஸிற்கு அல்ல என்றும் இது மிகவும் சீரியஸான உறவு என்றும் பிறகு தெரியவந்தது.
4/6

தற்போது நெருங்கிய வட்டாரங்களுக்கு மத்தியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதியில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.
5/6

இந்த திருமண நிகழ்ச்சியில், மார்வெல் நடிகர்களான ராபர்ட் டௌனே ஜே ஆர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜான் கிரசின்சுகி மற்றும் எமிலி பிளண்ட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
6/6

கிறிஸ் எவான்ஸின் மனைவிக்கு 26 வயது என்பதும் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published at : 12 Sep 2023 04:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement