மேலும் அறிய

கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்

கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறிய தகவலுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் பிரபல இயக்குநர் ஒருவர் முதல்வர் விஜயிடம் சீட் கேட்டதாக அமைச்சர் என் ஆனந்த் பேசியது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட அந்த பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வந்தார்கள். இது குறித்து லோகேஷ் கனகராஜ் தற்போது விளக்கமளித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டப்பேரவையில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ஒரு முக்கிய இயக்குனர் தங்கள் கட்சி சார்பில் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த தொகுதியில் நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வரும் மாவட்டச் செயலாளருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என விஜய் தெரிவித்ததாகவும் கூறினார். அந்த இயக்குனரின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.

புஸ்ஸி ஆனந்த் பேசிய இந்த தகவலுக்கு மத்தியில், சட்டப்பேரவையில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வும் பேசுபொருளானது. புஸ்ஸி ஆனந்த் பேசிக்கொண்டிருந்தபோது, வேளாண் துறை அமைச்சர் வினோத்  அருகில் இருந்த கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷை சுட்டிக்காட்டிய வீடியோ வைரலானது. 

இதே கிணத்துக்கடவு தொகுதியே இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொந்த ஊர் என்பதால் அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்ட அந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜா இருக்க வாய்ப்புள்ளது என சமூக வலைதளத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. விஜயை வைத்து மாஸ்டர் , லியோ ஆகிய இரு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவருடன் மிக நெருக்கமான நட்பும் பாராட்டி வருகிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது அவரிடம் எம்.எல்.ஏ சீட் கேட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பல தரப்பினர் தங்களது யூகங்களை முன்வைத்து வந்தார்கள். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் நேரடியாக இதுவரை விளக்கமளிக்கவில்லை என்றாலும் வலைப்பேச்சு ஊடகத்தின் மூலம் தனது தரப்பை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் விளக்கம்

வலையப்பேச்சு நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்?” என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார். தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட நபர் தான் இல்லை என்றும், அவர் வேறு யாரையாவது குறிப்பிட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

இதன் மூலம், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்திடம் தாம் தொகுதி கேட்டதாக வெளியான தகவலை லோகேஷ் கனகராஜ் மறுத்துள்ளார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget