மேலும் அறிய
Captain Miller : உடுக்கை ஒலியில் தெறிக்கவிடும் கோரனாரு...ட்ரெண்டிங்காகும் கேப்டன் மில்லர் பாடல்!
Captain Miller : தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் மூன்றாவது சிங்கிள் 'கோரனாரு' பாடல் வெளியாகி ரசிகர்களை கவனத்தை ஈர்த்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

கேப்டன் மில்லர் 3வது சிங்கிள்
1/6

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இது தனுஷின் 50வது திரைப்படம்.
2/6

கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி 'கேப்டன் மில்லர்' வெளியாக உள்ளது.
3/6

ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அருகில் நடைபெறுகிறது
4/6

ஏற்கனவே இப்படத்தின் 'கில்லர் கில்லர்' மற்றும் 'உன் ஒளியிலே' பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாவது பாடல் நேற்று வெளியானது.
5/6

தேவா, சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அலெக்சாண்டர் பாபு மூவரும் இணைந்து பாடியுள்ள 'கோரனாரு கோரனாரு...' பாடல் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
6/6

ராவான குரலில் ஒலிக்கும் இந்த பாடலில் தனுஷ் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடனமாடியுள்ளது ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. பாபா பாஸ்கர் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
Published at : 03 Jan 2024 01:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement