மேலும் அறிய
எதிர்பாராத நேரத்தில் விவாகரத்தை அறிவித்த 4 தமிழ் திரையுலக இசையமைப்பாளர்கள்! யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் 4 பிரபலங்களின் விவாகரத்து குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர்கள்
1/6

தமிழ் சினிமாவில் இப்போது பிரபலங்களின் விவாகரத்து தான் பெருகி வருகிறது. சினிமாவில் இருப்பவர்களுக்கு பெண் தர மாட்டோம் என்ற காலம் மலை ஏறிப்போய் இப்போ சினிமாவில் இருப்பவர்களுக்கு தான் பலர் தேடி சென்று பெண் கொடுக்க விரும்புகிறார்கள். அதே சமயம் அதிகளவில் விவாகரத்து சர்ச்சையில் சிக்குபவர்களும் திரையுலக பிரபலங்கள் தான். 5 வருடம், 10 வருடம் ஒன்றாக வாழ்ந்துவிட்டு ஏதேதோ காரணங்கள் சொல்லி விவாகரத்து செய்கிறார்கள். அதன் பிறகு மீண்டும் அடுத்த திருமணம் செய்கிறார்கள். அப்படி பல ஆண்டுகள் வாழ்ந்து விவாகரத்து செய்த 4 டாப் இசையமைப்பாளர்கள் பற்றிய தொகுப்பு தான் இது.
2/6

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது நீண்ட நாள் காதலியான சைந்தவியை 2013 ஆம் அண்டு திருமணம் செய்தார். சைந்தவி பின்னணி பாடகி. ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். கடந்த மே 13 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்போது வரையில் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவருமே 2ஆவதாக திருமணம் செய்யவில்லை. இந்த ஜோடிகளுக்கு ஒரு மகள் உள்ளார்.
Published at : 20 Nov 2024 09:06 PM (IST)
மேலும் படிக்க





















