மேலும் அறிய
Mankatha Unknown Facts : மாஸான மங்காத்தா படத்தை பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!
Mankatha Unknown Facts : அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

மங்காத்தா
1/5

ஜாலி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, வைபவ், அஷ்வின், பிரேம்ஜி, அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்தை பற்றி நம்மில் பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
2/5

இப்படத்தில் அஜித்திற்கு நண்பராக வரும் சிபிஐ ஆஃபிசர் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனாதான் நடிக்கவிருந்தாராம். அதன் பின்னர், இதில் அர்ஜுன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
3/5

மங்காத்தாவில் அஜித் அணிந்திருந்த செயினின் டாலர், கைவிலங்கு வடிவத்தில் இருந்ததை எத்தனை பேர் கவனித்து இருக்கிறீர்கள்? அஜித், இடைநீக்கப்பட்ட போலீஸ் அதிகாரி என்பதை குறிக்கவே டாலர் இது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது என இப்படத்தின் வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் முன்னதாக கூறியிருந்தார்.
4/5

முதலில் “Mangaatha” என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பின்னர், எண் கணித ரீதியாக “Mankatha” என மாற்றப்பட்டுள்ளது
5/5

படத்தின் இண்ட்ரோ பாடல் 5 நாட்களுக்கு பாங்காக், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. ஸ்டன்ட் காட்சிகள் பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு சில காட்சிகள் அஜித்தின் வீட்டிலும் ஷூட் செய்யப்பட்டுள்ளது.
Published at : 31 Aug 2024 11:12 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion