மேலும் அறிய

14 கங்காருக்கள் கொடூர கொலை: ஆஸி.,யில் அட்டூழியம் செய்த இளைஞர்கள் கைது!

கடந்த 2019 ஆம் ஆண்டு  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பல கங்காருகள் உள்பட பல வன விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியாவில் வேண்டுமென்ற கொடூரமாக கங்காருவைக்கொன்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஆஸ்திரேலியாவின் அடையாளமாகவும் அந்நாட்டின் தேசிய விலங்காகவும் கங்காரு விளங்கி வருகிறது. தத்தி தந்தித்தாவிச் செல்லும் கங்காருவைப்பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். அதோடு தனது குட்டிகளைத் தாங்கி செல்லும் பாசமே அனைவரையும் இதுவரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த சூழலில் தான் கடந்த வாரத்தில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 14 கங்காருக்கள் இறந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

  • 14 கங்காருக்கள் கொடூர கொலை: ஆஸி.,யில் அட்டூழியம் செய்த இளைஞர்கள் கைது!

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையில் இந்த வழக்கில் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையின் போது, 17 வயதுடைய சிறுவர்கள் வேண்டுமென்ற கங்காருவை அடித்துக்கொன்றதாகக் கூறப்படுகிறது. ஏன் இவ்வாறு மேற்கொண்டார்கள்? காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில். அடுத்த மாதம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகத்திற்கிடமான கங்காருவின் மரணம் குறித்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. தேசிய விலங்கான கங்காருக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் வன விலங்கு ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக “மனசாட்சி இல்லாத முட்டாள்கள் என்றும், மிருகங்களைக்கொன்றவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

 

மேலும் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் சட்டத்தின்படி, விலங்குகளைக்கொடுமைப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் $15,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பல கங்காருக்கள் உள்பட பல வன விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்குள்ளாகவே தற்போது 14 கங்காருக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
Embed widget