World Sight Day : உலக பார்வை தினம்: உங்கள் பார்வையை வலுவாக்க இந்த 3 பயிற்சிகள்..
கண்கள் நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், மேலும் பார்வை என்பது இயற்கையால் நமக்குக் கிடைத்த பரிசு
கண் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் தேதி உலக பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் 'உலக கண் தினம்' அல்லது 'உலக பார்வை தினம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கண்கள் நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், மேலும் பார்வை என்பது இயற்கையால் நமக்குக் கிடைத்த பரிசு. இந்த அழகான உலகத்தை நாம் நம் கண்களால் பார்க்கிறோம் ஆனால், உலகளவில் சுமார் 2.2 பில்லியன் மக்களுக்கு அருகில் அல்லது தொலைதூரத்தில் இருப்பது சரிவரத் தெரியாத வகையில் பார்வைக் குறைபாடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறைந்தபட்சம், இத்தனை பேரின் பிரச்னையில் பாதியாவது சரியான நேரத்தில் தீர்க்கப்பட்டிருந்தால் அவர்களது பார்வை மீட்கப்பட்டிருக்கும்.
லேப்டாப் போன் தொலைக்காட்சி என அத்தனையைப் பார்ப்பதாலும் நம் கண்கள் கஷ்டப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவது மட்டுமின்றி, விழிப்புணர்வு இல்லாததால், நாம் கண்களுக்கு சரியான ஓய்வும் கொடுப்பதில்லை.
அதனால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சிகளை தவறாமல் செய்து, எப்போதும் ஆரோக்கியமான கண்பார்வையுடன் இருக்கவும்.
1. ஒரு நாற்காலியில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி உடலை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பேனாவை எடுத்து, ஒரு கண்ணை மூடிக்கொண்டு, பேனாவை உங்கள் கண் விழி உயரத்துக்குக் கொண்டு வந்து அதன் முனையில் கவனம் செலுத்துங்கள். அடுத்து பேனாவை அதன் அருகில் மற்றும் வெகு தொலைவில் நகர்த்தவும். இப்போது இந்தக் கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணிலும் அவ்வாறே செய்யுங்கள். ஒவ்வொரு கண்ணிலும் இதுபோல 5 சுற்றுகள் செய்யவும். இந்த கண்பயிற்சி உங்கள் கவனம் செலுத்தும் திறன் மற்றும் கண்களில் உள்ள தசைகளின் ஆகியவற்றை சீர்படுத்துகிறது.
2. இந்த வகை உடற்பயிற்சிக்கு இரண்டு பேர் எதிரெதிரே நிற்க வேண்டும். ஒரு நடுத்தர அளவிலான பந்தை எடுத்து எதிரே இருப்பவர் மீது எறிந்து, அந்த நபர் அதைப் பிடித்தவுடன் நீங்கள் பந்தைப் பார்த்து கண் சிமிட்ட வேண்டும். அந்த நபர் உங்களிடம் பந்தை எறிந்தால், மீண்டும் கண் சிமிட்டவும். இந்த உடற்பயிற்சி கண்ணில் உள்ள தசைகளை வலுவடையச் செய்கிறது, இது கண்ணின் உள்ளே இருக்கும் லென்ஸின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
3. சூரியக் கதிர்கள் விழும் இடத்தில் உங்கள் கால்களை பாதி தூரம் தள்ளி வைத்து நிற்கவும். கண்களை மூடிக்கொண்டு சூரியனை எதிர்கொள்ளுங்கள். உங்கள் கண்கள் தளர்வாக இருப்பதையும், இறுக்கமாக மூடாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தலையை இடமிருந்து வலமாக மெதுவாக நகர்த்தவும், கதிர்கள் கண்ணில் விழுவதை உறுதி செய்யவும். தினமும் 2 நிமிடங்களுக்கு அதிகாலையில் இதைப் பயிற்சி செய்யுங்கள். இந்த உடற்பயிற்சி உங்கள் விழித்திரையை உணர்ச்சி மண்டலங்களைத் தூண்டுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )