Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Worlds Expensive Passport: உலகின் விலையுயர்த பாஸ்போர்ட் எந்த நாட்டில் வழங்கப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Worlds Expensive Passport: உலகின் விலையுயர்த பாஸ்போர்ட் கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்:
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட் மிகவும் அத்தியாவசியமான ஆவணமாகும். இந்த நிலையில், உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை நீங்கள் அடிக்கடி கேள்விபட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த தரவரிசையில், எந்த நாட்டின் பாஸ்போர்ட் எவ்வளவு சக்தி வாய்ந்தது அதாவது மிகவும் மதிப்புமிக்கது என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்திய பாஸ்போர்ட் ஹென்லி குறியீட்டில் 82வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூரின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது. அதன்படி, பல நாடுகளுக்கு விசா இன்றியே சிங்கப்பூர் குடிமகன்கள் பயணிக்கலாம்.
அதிக விலை கொண்ட பாஸ்போர்ட்:
அதேநேரம், உலகிலேயே அதிக விலை கொண்ட பாஸ்போர்ட் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? இந்தப் பட்டியலில் டாப்-10 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்? உண்மையில், உலகின் மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர், அமெரிக்கா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் இல்லை. ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் மெக்சிகோவைச் சேர்ந்தது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய மெக்சிகன் பாஸ்போர்ட்டை வாங்க, பயனாளர்கள் தோராயமாக ரூ.19, 481.75 செலுத்த வேண்டும். அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் 10 ஆண்டுகால பயன்பாட்டை கொண்ட பாஸ்போர்ட்டின் விலை முறையே ரூ.13,868 மற்றும் ரூ.19,041 ஆகும்.
விலை உயர்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல்:
1. மெக்சிகோ (10 வருட பாஸ்போர்ட்)
2. ஆஸ்திரேலியா
3. அமெரிக்கா
4. மெக்சிகோ (6 வருட பாஸ்போர்ட்)
5. நியூசிலாந்து
6. இத்தாலி
7. கனடா
8. இங்கிலாந்து
9. மெக்சிகோ (3 ஆண்டுகள்)
10. பிஜி தீவு
இந்தியா லிஸ்டில் உள்ளதா?
விலை உயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எங்கே நிற்கிறது? உண்மையில், இந்திய பாஸ்போர்ட் ஆண்டுச் செலவின் அடிப்படையில் இரண்டாவது மலிவான மற்றும் மிகவும் சிக்கனமான பாஸ்போர்ட் ஆகும். இந்தியாவின் பாஸ்போர்ட் என்பது வருடாந்தர செல்லுபடியாகும் செலவின் அடிப்படையில் மலிவானதாகும். இந்த ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்திய பாஸ்போர்ட் பட்டியலில் இரண்டாவது மலிவான பாஸ்போர்ட் ஆகும். அதாவது, 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை தயாரிப்பதற்கான செலவு 18.07 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 1524.95 மட்டுமே ஆகும்.