Colombia Volcano | ’எரிமலை எப்படிப் பொறுக்கும்ம்ம்....’ - 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறுமும் கொலம்பிய எரிமலை.. ஆச்சரிய தகவல்கள்
சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய ஒரு கிராமமே இதனால் பலியானது. கொலம்பிய வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
நவம்பர் 1985, 36 வருடங்களுக்கு முன்பு இதே மாதத்தில் கொலம்பியாவின் மிகப்பெரும் எரிமலையான நெவாடோ டெல் ரூய்ஸ் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்புகளைக் கக்கியது. சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய ஒரு கிராமமே இதனால் பலியானது. கொலம்பிய வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
View this post on Instagram
20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகவும் இது வகைபடுத்தப்படுகிறது.இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த மலை மீண்டும் சீற்றம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இதனை கொலம்பியன் ஜியோலாஜிக்கல் சொஸைட்டியும் உறுதிபடுத்தியுள்ளது. 11 வருடங்களாகவே இந்த மலை நிலையற்ற தன்மையை வெளிப்படுத்திவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
View this post on Instagram
பசிஃபிக் பெருங்கடலைச் சுற்றியிருக்கும் ரிங் ஆஃப் பயர் என்னும் எரிமலைகளின் வட்டத்தில் இந்த மலை மிக முக்கியமானது. 13 நவம்பர் 1985ல் அது வெடித்ததில் அர்மேரோ என்னும் நகரமே அழிந்தது. எரிமலையில் சிக்கிய 13 வயதுச் சிறுமி மூன்று நாட்கள் உணவில்லாமல் வீட்டிக்குள் புகுந்த சகதிக்குள் மாட்டி இறந்த காட்சி இன்றளவும் உலக மக்களை பதைபதைக்கச் செய்வதாக உள்ளது.