”மூண தொட்டது யாரு?” : நிலாவில் மனிதர்கள்.. நாசா வெளியிட்ட வைரல் ப்ளூப்பர்ஸ்
சந்திரனில் விண்வெளி வீரர்களின் நடைப்பயணத்தில் இருந்து "புளூப்பர்களை" காட்டுவதாகக் கூறும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது.
கடைசியாக மனிதர் நிலவில் காலடி எடுத்து வைத்தது 1972ல் நடந்தது. அப்போல்லோ 17 விண்கலப் பயணத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்கள் நிலாவில் இருந்து நிறைய மாதிரிகளை கொண்டு வந்தனர், மேலும் நிலவின் மேற்பரப்பை நிறையவே ஆய்வு செய்தனர். தற்போது அந்த சந்திரனில் விண்வெளி வீரர்களின் நடைப்பயணத்தில் இருந்து "புளூப்பர்களை" காட்டுவதாகக் கூறும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது.
Bloopers from NASA showing astronauts losing their footing while walking on the moon. pic.twitter.com/4craeD80O3
— Black Hole (@konstructivizm) June 7, 2022
@konstructivizm என்ற ட்விட்டர் கணக்கு இந்த வீடியோவை வெளியிட்டது, அதில் பல விண்வெளி வீரர்கள் நிலவில் தங்கள் விண்வெளி உடையில் நடந்து சென்று விழுவதைக் காட்டுகிறது. அந்த வீடியோவின் தலைப்பில், “நாசாவின் இந்த ப்ளூப்பர்களில் சந்திரனில் நடக்கும்போது விண்வெளி வீரர்கள் தங்கள் கால்கள் தடுமாறுவதைக் காட்டுகிறார்கள்.”
இதைப் பல ட்விட்டர் பயனாளர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுக்கு பல கமெண்ட் செய்துள்ளனர். இதுவரை இந்த வீடியோ ட்விட்டரில் 350,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஐகானிக் நடனமான மூன்வாக்கைக் குறிப்பிடும் வகையில், "மூன்வாக் எப்படி செய்வது என்று உங்களுக்குத் தெரியாதபோது இது நடக்கும்" என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், விண்வெளி வீரர்களின் விண்வெளி உடைகளைக் குறிப்பிட்டு கமெண்ட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் இதே போன்று ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். இதை அடுத்து விண்வெளியில் இருந்து மற்றொரு வீடியோ வைரலானது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணிபுரியும் போது விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் மிதந்தபடி பூமியைச் சுற்றி வருவதை அது காட்டியது.
அதுகுறித்து கமெண்ட் செய்துள்ள மஹிந்த்ரா, “பார்க்க வசீகரமாக இருக்கிறது. உண்மையில் இது மிகச் சிறந்ததொரு பாலேட் நடனம் போல இருக்கிறது. இந்த விண்வெளி வீரரின் பணி போல் எனது பணி மிகவும் முக்கியமானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும் என்று நம்பி எனது வாரத்தைத் தொடங்க விரும்புகிறேன் #MondayMotivation" என எழுதியிருந்தார்.
வொண்டர் ஆஃப் சயின்ஸ் பக்கத்தின் கூற்றுப்படி, "சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரிகளை புதிய லித்தியம்-அயன் பேட்டரிகள் கொண்டு மாற்றுவதற்காக ஜூலை 21, 2020 அன்று நிகழ்ந்த விண்வெளி நடைப்பயணத்தின் போது" இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.