Video : விண்வெளியில் எல்லாம் மிதக்கும்.. தேன் என்னவாகும்? ஒரு விண்வெளி வீரரின் சுவாரஸ்ய வீடியோ
விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் அங்கே எதுவும் கீழே விழாது எல்லாம் மிதந்து கொண்டே தான் இருக்கும் என்று நமக்கு அடிப்படை அறிவியல் பாடத்தில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர்.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் அங்கே எதுவும் கீழே விழாது எல்லாம் மிதந்து கொண்டேதான் இருக்கும் என்று நமக்கு அடிப்படை அறிவியல் பாடத்தில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர்.
நம் அனுபவம் புத்தகத்தோடு மட்டும்தான். ஆனால் விண்வெளி வீரர்களுக்கு அப்படியில்லை. அவர்கள் அன்றாடம் விண்வெளியில் புதுப்புது அனுபவங்களைப் பெறக்கூடும். அத்தகைய அனுபவங்களில் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் விண்வெளி வீரர் டேவிட் செயின்ட் ஜேக்கஸ். இவர் 2018 டிசம்பரில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். அக்கே 204 நாட்கள் வசித்தார். அப்போது பல்வேறு ஆராய்ச்சிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். சில ஆராய்ச்சிகள் சுவாரஸ்யமானவை.
மனிதர்களுக்கு உரித்தான க்யூரியாஸிட்டியால் ஏற்படுபவை. அப்படி ஒரு நாள் அவர் தேன் டப்பாவை திறக்க அதிலிருந்த தேன் கீழே சிந்தாமல் மிதந்தது. ஆம் விண்வெளியில் எல்லாம் மிதக்கத்தானே செய்யும் இதில் என்ன புதிது எனக் கேட்கிறீர்களா. இருக்கிறது. அவர் திறந்த டப்பாவில் இருந்த தேன் மீண்டும் அதே டப்பாவிற்குள் சுழன்றடித்துச் சென்றதுதான் அந்த அதிசயம்.
ஜீரோ கிராவிட்டியில் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையில் ரியாக்ட் செய்யும். அப்படித்தான் இந்த தேன் டப்பாவில் இருந்து தேன் வெளியேறி பின்னர் உள்ளேயே சுழன்று திரும்பியிருக்கிறது என்று டேவிட் செயின்ட் ஜேக்கஸ் தெரிவித்தார். இவர் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளி வீரர். இவருடைய இந்த வீடியோவை 2019 ஆம் ஆண்டே கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பகிர்ந்துவிட அந்த வீடியோ இப்போது வைரலாகி 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
விண்வெளியில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
விண்வெளியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஒரு வீடியோவை கனடியன் ஸ்பேஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. அதையும் கண்டு மகிழுங்கள். விண்வெளியில் பல் துலக்குவது எப்படி என்றுகூட அந்த வீடியோவில் இருக்கிறது. விண்வெளி ஆச்சர்யம் நிறைந்தது மட்டுமல்ல சுவாரஸ்யம் நிறைந்தது என்றும் தெரிந்து கொள்ளலாம். விண்வெளிக்கு செல்பவர்கள் அங்கே ஜீரோ கிராவிட்டியில் இருப்பதால் அவர்களுடை உடல் எடை குறையும். எலும்புகளின் அடர்த்தி குறையும். இன்னும் பல உபாதைகளும் ஏற்படும். விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய பின்னர் அவர்களால் நீண்ட காலத்திற்கு நிலையாக நிற்க முடியாது. கால் தரையில் படாததுபோல் சரிந்து விழுவார்களாம். இத்தனையும் தெரிந்தே தான் இவர்களைப் போன்றோர் கனவுகளை துரத்திச் செல்கின்றனர் விண்வெளி வீரர்கள்.