Omicron Death in US: அமெரிக்காவில் முதல் ஓமைக்ரான் மரணம்: தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர் டெக்சாஸில் இறப்பு!
Omicron Death in US: ஓமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்த நபர் 50-60 வயதுடையவர் ஆவார், அவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், வைரஸ் கடுமையாக பாதித்ததாக சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட், உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய டெல்டாவை விட பல மடங்கு வேகத்தில் இது பரவும் எனவும், கொரோனா தடுப்பூசியின் திறனையும் செயலிழக்கச் செய்யும் என்பதும் ஓமைக்ரான் மீதான அச்சத்தை பெரிதுபடுத்தியிருக்கிறது. தமிழகம் உட்பட இந்தியாவில் இதுவரை 126 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதித்துள்ளது. இந்நிலையில் குறைவான பாதிப்பை உருவாக்கும் என்று கணிக்கப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவின் முதல் மரணத்தை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அமெரிக்கா நேற்றைய தினம், கோவிட்-19 ஒமிக்ரான் வேரியன்ட் பாதித்த முதல் மரணத்தைப் பதிவுசெய்தது, டெக்சாஸை சேர்ந்த அவர் தடுப்பூசி போடாதவர் என்று ஹாரிஸ் கவுண்டி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட முதல் ஓமிக்ரான் மரணம் என்று நம்பப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) இந்த ஓமைக்ரான் மரணத்தில் எழுந்து வரும் கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்த நபர் 50-60 வயதுடையவர் ஆவார், அவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், வைரஸ் கடுமையாக பாதித்ததாகவும் உடல்நிலை அதிகபட்ச ஆபத்தில் இருந்ததாகவும் சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sad to report the first local fatality from the Omicron variant of COVID-19. A man in his 50’s from the eastern portion of Harris County who was not vaccinated. Please - get vaccinated and boosted.
— Lina Hidalgo (@LinaHidalgoTX) December 20, 2021
மாவட்ட நீதிபதி லினா ஹிடால்கோ ட்வீட்டின் படி, அந்த நபர் கொரோனா ஓமைக்ரான் மாறுபாட்டின் முதல் அமெரிக்க மரணம் என்று புலப்படுகிறது. "தயவுசெய்து - தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள், எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்," என்று ஹிடால்கோ கூறினார். டிசம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான வரிசைமுறை தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க கொரோனா வைரஸ் தொற்றுகளில் 73% கொரோனா வைரஸில் ஓமிக்ரான் வேரியன்ட்டின் தாக்குதல் உள்ளது என்று CDC நேற்று தெரிவித்தது. முன்னதாக டிசம்பரில், ஒமிக்ரானில் இருந்து உலகளவில் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் மரணத்தை பிரிட்டன் அறிவித்தது. பிரிட்டனில் இப்போது 12 பேர் ஓமைக்ரானால் இறந்துள்ளனர், மேலும் 104 பேர் தற்போது மருத்துவமனையில் உள்ளனர் என்று துணைப் பிரதமர் டொமினிக் ராப் திங்களன்று டைம்ஸ் ரேடியோவிடம் தெரிவித்தார்.