10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் போலியோ பாதிப்பு!
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவில் ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவில் ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். மன்ஹாட்டனுக்கு வடக்கே 30 மைல் (48 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ராக்லேண்ட் கவுண்டியில் வசிக்கும் ஒருவருக்கு போலியோ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
BREAKING: The first US polio case in over 9 years happened because they were not vaccinated. They now have paralysis.
— Jon Cooper (@joncoopertweets) July 21, 2022
I don't know who needs to hear this right now, but vaccines work.
அமெரிக்காவில் கடைசியாக 2013இல் ஒருவருக்கு போலியோ பாதிப்பு இருந்துள்ளது என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. சமீபத்திய போலியோ பாதிப்பு குறித்து பேசியுள்ள சுகாதார அலுவலர், "போலியோ தடுப்பு மருந்தை எடுத்து கொண்ட ஒருவரிடமிருந்து நோய் பரவி உள்ளதாக தெரிகிறது" என்றார்.
அமெரிக்காவில் போலியோ மருந்து செலுத்தும் பணி, கடந்த 2000ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நியூயார்க் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "செயலிழந்த தடுப்பு மருந்தை எடுத்து கொண்டவர்களிடமிருந்து உருமாறாத வைரஸ் பரவாது. எனவே, அமெரிக்காவுக்கு வெளியே தடுப்பு மருந்து அளிக்கப்படும் பகுதியிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நோய்த்தொற்று குறித்து கவனமாக இருக்குமாறும் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாத மக்கள் அதை போட்டு கொள்ளுமாறு சுகாதாரத்துறை அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக, உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போலியோவை அழித்து ஒழிக்க பெரும் உதவி செய்தது. இந்த உயிர்கொல்லி நோயால், 5 வயதுக்கு கீழான குழந்தைகள் பெரும் பாதிப்படைந்தனர்.
1988 ஆண்டிலிருந்து, போலியோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 விழுக்காடு குறைந்தது. அந்த காலக்கட்டத்தில், 125 நாடுகளில், எண்டெமிக் நோயாக இருந்த போலியோவால் 3,50,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவில் 1950களிலும் 1960களில் போலியோ மருந்து கண்டுபிடிக்க பின்னரும், போலியோ வெகுவாக குறைந்தது. இயற்கையாக போலியோ பாதிப்பு கடைசியாக, 1979ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் போலியோ வைரஸ் பலவீனமாக இருந்தாலும், இந்த உருமாறிய நோயால் தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்