School Teacher Beheaded : ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த ஆசிரியர்.. தலையை வெட்டி பள்ளியில் தொங்கவிட்ட கொடூரம்!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த 2021 பிப்ரவரி 1ம் தேதி முதல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி நடத்தி வருகிறது. அந்நாட்டின் தலைவராக இருந்த ஆங் சான் சூகிக்கு ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்குன்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தொடர்ந்து பல முக்கிய தலைவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால பலரும் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்தது.
ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களை இரக்கமின்றி தாக்கிவருகின்றது மியான்மர் ராணுவம். சொந்த நாட்டில், சொந்த ராணுவத்தால் வதைக்கப்படும் மக்கள் வாழவழியின்றி தற்போது தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர். ஏற்கனவே மியான்மார் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு தஞ்சம் புகுந்த ரேஹகியா அகதிகளுக்கு மலேசிய அடைக்கலம் கொடுக்கலாம் மியான்மருக்கு திரும்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மியான்மரில் மிக்வே மாகாணத்தில் தவுங் மாயிட் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 46 வயதான சா டுன் மொய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சா டுன் மொயை கைது செய்துள்ளனர்.
கைது செய்ததை தொடர்ந்து அவரி கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பூட்டியிருந்த பள்ளிக்கூடத்திற்கு அழைத்துசென்ற ராணுவத்தினர், பொதுமக்கள் முன்னிலையில் ஆசிரியரின் தலையை கொடூரமாக வெட்டி துண்டித்துள்ளனர். மேலும், வெட்டப்பட்ட தலையை பள்ளிக்கூட கேட்டில் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.
We are appalled by reports that Burma’s military regime arrested, publicly mutilated, and beheaded a schoolteacher in Magway Region. The regime's brutal violence, including against educators, demands a strong response from the international community.
— Ned Price (@StateDeptSpox) October 19, 2022
இதையடுத்து, மியான்மர் ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொன்றதை அமெரிக்க அரசாங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பர்மா இராணுவ ஆட்சியில், மக்வே பிராந்தியத்தில் ஒரு பள்ளி ஆசிரியரைக் கைதுசெய்து, பகிரங்கமாக சிதைத்து தலையை துண்டித்த செய்திகள் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கல்வியாளர்களுக்கு எதிரான ஆட்சியின் கொடூரமான வன்முறை, சர்வதேச சமூகத்தின் வலுவான பதிலை எதிர்பார்க்கிறது.” என பதிவிட்டுள்ளார்.