US on Coronavirus: அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் முகக்கவசம் தேவையில்லை!
அமெரிக்க நோய் தடுப்பு மையம் அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு இருந்த கட்டுப்பாட்டையும் தற்போது புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்கா உள் பயணம் செய்யும் நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை. அத்துடன் அவர்கள் தங்களை தனிமை படுத்தி கொள்ளவும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுள்ளது.
கொரோனா பரவல் அமெரிக்காவில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டு அரசு நிறையே மக்களை அங்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வழி வகை செய்தது தான். இந்தச் சூழலில் தற்போது அங்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் நோய் தடுப்பு மையம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியவர்கள் அங்கு முகக்கவசம் அணிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியான உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் முகக்கவசம் அணியாமல் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அதிபர் ஜோ பைடன்,"இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். நாம் விரைவாக அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் இந்த நாள் வேகமாக வந்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை. இரண்டாம் டோஸ் போடாதவர்கள் அதுவரை முகக்கவசம் அணிய வேண்டும்.
கடந்த 114 நாட்களில் 250 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக 50 மாநிலங்களில் 49 மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நான்கு மாதங்களில் 60 சதவிகிதம் அமெரிக்கர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர் " எனத் தெரிவித்தார்.
அமெரிக்க நோய் தடுப்பு மையம் அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு இருந்த கட்டுப்பாட்டையும் தற்போது புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்கா உள் பயணம் செய்யும் நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை. அத்துடன் அவர்கள் தங்களை தனிமை படுத்தி கொள்ளவும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுள்ளது.
அமெரிக்காவில் ஃபைசர், மாடெர்னா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ரா செனகா உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இன்னும் பிற நாடுகளில் தடுப்பூசி தொடர்பாக இன்னும் சர்சைகள் போய்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் இன்னும் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையும் முழுமை பெற வில்லை . ஆனால் முழு வல்லரசான அமெரிக்காமவில் தடுப்பூசி மீது அந்நாட்டு அதிபர் முழு நம்பிக்கை வைத்து முககவசம் தேவையில்லை என்று கூறுகிறார் என்றால், அவர்களின் நம்பிக்கை பாராட்டுக்குரியது.