US Attack ISIS-K LIVE Updates: காபூலில் மேலும் ஒரு தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!
US Attack ISIS-K LIVE Updates: காபூலில் ஐஎஸ்ஐஎஸ்., அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா தற்போது தன்னுடைய பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. அது தொடர்பான லைவ் அப்டேட்ஸ் இதோ...
LIVE
Background
US Drone Attack on ISIS-K
காபூல் விமான நிலைய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் மீது ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., தாக்குதலை தாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த நிலையில் தற்போது இந்தத் தாக்குதல் நடைபெற்று உள்ளது.
Kabul Attack: காபூலில் மேலும் ஒரு தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன் எச்சரிக்கை
இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்த காபூல் விமான நிலையத்தில் மேலும் ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விமான நிலையத் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். அமைப்பின் மீது அமெரிக்கப் படை ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
US Drone Attack on ISIS-K: குறி வைத்தவர் கொல்லப்பட்டார்: அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை கொலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தாக்குதலின் நோக்கம் நிறைவேறியதாகவும். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்ட அந்த நபர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
காபூல் வெளியேற்றம்: பிரான்ஸ் அறிவிப்பு
காபூலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை முடிந்ததாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது
US Attack on ISIS-K: அமெரிக்க தாக்குதலில் 2 ஐஎஸ்ஐஎஸ்., தீவிரவாதிகள் பலி!
அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் வாகனத்தில் சென்ற இரு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இறந்தநபர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
US Attack on ISIS-K: ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்!
தற்போது அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் தாக்குதல், பாக்கிஸ்தான் எல்லையில் என்பதால், எங்கு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.