Trump vs Netanyahu: இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் திட்டிய ட்ரம்ப்.. அப்படி என்ன நடந்துச்சு?
Trump vs Netanyahu: இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆபாச வார்த்தையில் திட்டியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளாது

Trump vs Netanyahu: தனது நெருங்கிய நண்பரும், இஸ்ரேல் அதிபருமான நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆபாசமாக பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஹமாஸ் தலைவர்களுக்கு குறி:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹாவில் விமானப்படை மூலம் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக இந்த தாக்குதல் என்பது ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான ஹலில் அல்-ஹயா, அவரது மகன் ஹமாம் அல்-ஹயா மற்றும் அவர்களது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஜிகாத் லுபாத் ஆகியோரை குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் கத்தார் அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனார். ஆனால், ஹலில் அல்-ஹயா மட்டும் உயிர் தப்பினார்.
நட்பு நாடுகள்:
அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நட்பு நாடாக இருப்பதை போலாவே கத்தாரும் நட்பு நாடக இருந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் தங்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்திய் இஸ்ரேலை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மீது கத்தார் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், மறுபுறம் அமெரிக்கா இந்த தாக்குதல் தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவருகிறது.
கெட்ட வார்த்தையில் திட்டிய ட்ரம்ப்:
இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். அதாவது இஸ்ரேல் கத்தார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக தன்னிடம் ஏன் எதுவும் கூறவில்லை என்று நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக The Wall Street Journal என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல், இது ஒன்றும் புத்திசாலித்தனமானது அல்ல என்றும் ட்ரம்ப் கூறியதாகவும் ”He is F**king Me" என்றும் ட்ரம்ப் சொன்னதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆனால், ட்ரம்ப் நெதன்யாகு மீது அதிருப்தியில் இருப்பதாக வெளிக்காட்டிக்கொள்வது வெறும் நாடகம் என்றும் செப்டம்பர் 11 ஆம் தேதி காலையிலேயே நெதன்யாகு தனது திட்டத்தை டிரம்பிடம் தெரிவித்ததாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.





















