மேலும் அறிய
Advertisement
திருநம்பியின் குழந்தை பெற்ற அனுபவம்: பெண்ணாக தன்னை பாவித்ததாக வேதனை!
தான் தன் குழந்தைக்கு இன்னொரு தந்தையாகவே இருப்பதாகவும், குழந்தையும் தன்னை தந்தை என்றே அழைப்பதாகவும் பெருமிதம் கொள்கிறார் பென்னட்.
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ். 37 வயதான இவர், கடந்த 2011ல் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். அந்த மாற்றம், தான் ஒரு திருநம்பி என்பதாகும். ஆனாலும் அவர் அதை வெளிப்படுத்த தயங்கினார். ஆனால் அது 3 ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடித்தது.
2014ல் அவர் தன்னை முழு திருநம்பியாக உணர்ந்து, புதிய வாழ்க்கைக்கு திரும்பினார். அதுவரை பெண்ணாக இருந்த அவர், அதன்பின் திருநம்பியாக முழு வடிவம் பெற்றார். 2017 ல் மாலிக் என்பவரை அவர் சந்தித்தார். அவரை காதலித்தார். இருவரும் பரஸ்பரம் காதலித்தனர். அவர்களது காதல், மாதங்களை கடந்து, ஆண்டுகளையும் கடந்தது. இரண்டு ஆண்டு காதலுக்குப் பின் 2019ல் காஸ்பர்-மாலிக் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில் பெனட்-மாலிக் ஜோடி, குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தது. அதற்காக பெனட் தனது, டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் சிகிச்சையை சில ஆண்டுகள் நிறுத்தினார். அதற்கு முன் அவர் தனது உடலின் மேல்பகுதியில் மட்டும் அறுவை சிகிச்சை செய்திருந்தார். தனது பிறப்புறுப்பில் அவர் எந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை. அதன் பின் அவர் குழந்தை பிறப்பிற்கு தேவையான மருத்துவ உதவியுடன், தாம்பத்யத்தை தொடங்கினர். இதில், பெனடர் இயற்கையாக கருத்தரித்தார். 2020 ல் சிசேரியன் மூலம்அவர்களுக்கு ஹட்சன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
ஹார்மோன்கள் வெளியேறுவதை தவிர, வேறு எந்த மருத்துவ தலையீடும் இல்லாமல் இயற்கையாகவே கருத்தரித்ததை 2020ல் அவர் உணர்ந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி தொடரவில்லை. வேகமாக பரவிய கொரோனா தொற்றால் அவர் பயந்தார். லாக்டவுன் காரணமாக, வீட்டில் முடங்க நேர்ந்தது. குழந்தையை பாதுகாக்க சிரமப்பட்டார். குழந்தை பிறந்ததை விட, பிறந்த நேரத்தில் சிகிச்சையில் இருந்த நாட்கள் மிக கொடுமையாக இருந்ததாக பெனட் தன் அனுபவத்தை கூறியுள்ளார்.
View this post on Instagram
தாடி மற்றும் தட்டையான மார்பகத்துடன் இருந்த அவரை, அமெரிக்காவின் கர்ப்ப வணிகம் கடுமையாக பாதித்ததாம். ஆம், அமெரிக்காவில், கர்ப்ப காலம், மருத்துவமனைகளில் பெரு வணி்கமாக பார்க்கப்படுவதாக, பெனட் குற்றம்சாட்டுகிறார். தான் ஒரு தந்தையாக தான் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், பெண்ணாக குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்பதை அவர் நம்புகிறார். ஆனால், தட்டையான மார்பும், தாடியும் இருந்தும், தன்னை மருத்துவமனையில் குழந்தையின் தாயாகவே மருத்துவ பணியாளர்கள் அழைத்ததாகவும், அது தனக்கு சங்கடமாக இருந்ததாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளளார். தான் தன் குழந்தைக்கு இன்னொரு தந்தையாகவே இருப்பதாகவும், குழந்தையும் தன்னை தந்தை என்றே அழைப்பதாகவும் பெருமிதம் கொள்ளும் பென்னட், தன் குழந்தையின் வளர்ப்பில் தற்போது முழு கவனம் செலுத்தி வருவதாகவும் பெருமை கொள்கிறார்.
2015ல் தனக்கு ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக் கொண்ட பெனட், அதற்காக 5 ஆயிரம் அமெரிக்க டாலரை செலவு செய்ததாகவும், மார்பகங்கள் மீது அவருக்கு வெறுப்பு இருந்ததால், அவற்றை அப்போது அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion