Afghanistan: ’மனித உரிமைகள் ஆணையம் தேவையற்றது’ - தலிபான்கள் எடுத்த அதிரடி முடிவு
ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையம் கலைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளை கலைப்பதாக தலிபான் அமைப்பின் அதிகாரிகள் (Taliban authorities) அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதற்கு பின், தலிபான் அமைப்பு பல அதிரடியான, மனிதத்திற்கு எதிரான மாற்றங்களை செய்து வருவது தொடர்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு ஆதரவுடன் இயங்கி வந்த அரசின் துறைகளில் முக்கியமானவற்றை கலைத்துள்ளது.
தலிபான் அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணையம் தேவையற்றது என்று கூறி அதை கலைத்துள்ளது. நாடு ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும், இந்த வேளையில், மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட இன்னும் சில துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது இயலாது என்று அத்துறைகளை கலைத்துள்ளாதாக தெரிவித்துள்ளது.
#SouthAsiaNews | Taliban authorities in Afghanistan dissolved five key departments of the former US-backed government, including the country's Human Rights Commission, deeming them unnecessary in the face of a financial crunch, an official said on Monday (May 16). pic.twitter.com/7baMdEtw9x
— NORTHEAST TODAY (@NortheastToday) May 17, 2022
இந்த நிதியாண்டில் ஆப்கானிஸ்தான் 44bn ஆப்கானிஸ் (501 மில்லியன் டாலர்கள் ) அளவிற்கு நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாக, தங்கள் முதல் நிதி அறிக்கையில் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
”மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட துறைகள் தேவையானவைகள் என்று கருதாததால், அவற்றிற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்குவது இயலாது என்பதால் கலைக்கப்பட்டுவிட்டது.” என்று தலிபான் அரசின் துணை செய்தித்தொடர்பாளர் இனாமுலையா சமன்கனி ( Innamullah Samangani) தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தன்வசமாக்கியபோது, நாட்டு மக்களுக்கு ஏற்றவாறு, இனி எல்லாம் நவீனமான வாழ்க்கையை வழங்குவோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், இன்னும் பெண் கல்வி உரிமை குறித்து எந்த அறிவிப்பினையும் வழங்கவில்லை. பெண்கள் எங்காவது செல்ல வேண்டும் என்றால், உடன் ஓர் ஆண் உறவினர் துணையிருக்க வேண்டும் என்று உத்திரவிட்டிருப்பது பிற்போக்கானது; இது சம உரிமை, பெண் உரிமை போன்றவற்றிருக்கு எதிரானது.
தற்போது, ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையம் கலைக்கப்பட்டிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்