Sputnik Light Vaccine | இந்தியாவுக்கு வந்தது ஸ்புட்னிக்.. முதல் டோஸுக்கே இவ்வளவு தடுப்புத்திறனா? ஆய்வு என்ன சொல்கிறது?
இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்பட்டவருகிறது. இதுவும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போல் இரண்டு டோஸ் செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசி ஆகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் ஒரு சில மாநிலங்களில் போதிய தடுப்பூசி இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி இன்று முதல் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் மற்றொரு தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் ஒரே டோஸ் 80 சதவிகிதம் பாதுகாப்பை தருவதாக ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் சுகாதாரத்துறை, "ரஷ்யாவின் ஒரு டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 79.4 சதவிகிதம் பாதுகாப்பை தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் மற்றொரு தடுப்பூசியான ஸ்புட்னிக் வி இரண்டு டோஸ்கள் 91.6 சதவிகிதம் பாதுகாப்பை தருகிறது.
இந்த ஒரு டோஸ் தடுப்பூசி கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் வேகமாக செயல்பட்டு பரவலை கட்டுப்படுத்த உதவும். மேலும் இந்த ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி தற்போது உலகில் வலம் வரும் அனைத்து வகையான கொரோனா தொற்று வைரஸ்களுக்கும் நல்ல விதமாக வேலை செய்வதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை 60 நாடுகளுக்கு மேல் ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்புகள் இன்னும் இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை.
இந்த ஸ்ட்புனிக் லைட் தடுப்பூசியின் விலை 10 அமெரிக்க டாலர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது மூன்றாம் நிலை சோதனையில் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த மூன்றாவது சோதனை ரஷ்யா, யுஏஇ, கானா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்டதுள்ளது. இந்த சோதனை முடிவுகள் விரைவில் வெளியே வரும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ரஷ்யாவின் மற்றொரு தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் 91 சதவிகிதத்திற்கு மேல் பாதுகாப்பானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்புட்னிக் வி ரக தடுப்பூசியை இந்தியா அண்மையில் பயன்படுத்த ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் இந்தியாவில் 35 மையங்களில் முதலில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்தச்சூழலில் ஸ்புட்னிக் லைட் என்ற ஒரு டோஸ் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் ஒரே டோஸ் 80 சதவிகிதம் வரை பாதுகாப்பு அளிப்பதால் விரைவாக அதிக மக்களுக்கு இதை செலுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்புட்னிக் லைட் ரக தடுப்பூசி வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.