உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ திருட்டு… என்எஃப்டி நிறுவனத்திலிருந்து 600 மில்லியன் டாலர் அடித்த ஹேக்கர்கள்!
மார்ச் 23 அன்று திருடப்பட்ட போது அதன் மதிப்பு 545 மில்லியன் டாலர்களாக இருந்தது,ஆனால் கடந்த செவ்வாய்கிழமை விலைகளின் அடிப்படையில் சுமார் 615 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக உயர்ந்துள்ளது.
உலகின் பிரபலமான டெஃபி மற்றும் கேம் ஆக்ஸி இன்ஃபினிட்டி என்.எஃப்.டி (game Axie Infinity NFT) பிளாக்செயின் தளமான ரோனின் தளத்திலிருந்து 625 மில்லியன் டாலர் மதிப்புள்ள எதிரியம் மற்றும் யூஎஸ்டிசி காயினை ஹேக்கர்கள் கொள்ளையடித்து மிகப்பெரிய சைபர் அட்டாக்கை நடத்தியுள்ளனர் என ரோனின் தளம் அறிவித்துள்ளது.
பிளாக்செயின் (Blockchain) இயங்குதளம் மற்றும் ஆக்ஸி இன்ஃபினிட்டி (Axie Infinity) ஆபரேட்டரான ஸ்கை மாவிஸ் (Sky Mavis) இந்த பாதுகாப்பு மீறலை ஒப்புக்கொண்டுள்ளனர். 173,600 டாலர் எதிரியம் (Ethereum) மற்றும் 25.5 மில்லியன் யூஎஸ்டிசி (USDC - அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட ஒரு கிரிப்டோகரன்சி) ஆகியவை இரண்டு மிகப்பெரும் கரன்சிகளை ரோனின் தளத்திலிருந்து இருந்து ஹேக் மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளனர். ஹேக்கர்கள் ஒரு தனிப்பயன் செய்யப்பட்ட புரோகிராம்கள் மூலம் இந்த ஹேக்கை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மார்ச் 23 அன்று திருடப்பட்ட போது அதன் மதிப்பு 545 மில்லியன் டாலர்களாக இருந்தது,ஆனால் கடந்த செவ்வாய்கிழமை விலைகளின் அடிப்படையில் சுமார் 615 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக உயர்ந்துள்ளது.இது கிரிப்டோ உலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய திருட்டுகளில் ஒன்றாகும். கிரிப்டோ முதலீட்டாளர் ஒருவர் அவரின் 5,000 எதிரியம் காயின்களை திரும்பப்பெற முடியவில்லை என ரோனின் தளத்திற்கு அளித்த புகாரை அடுத்து இந்த மிகப்பெரும் ஹேக் கொள்ளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மார்ச் 29 அன்று அத்தளம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. ரோனின் தளம் தற்காலிகமாக அதன் வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது எனவும் மேலும் மறுபடியும் தாக்குதல் நடைபெறுவதை தடுத்து நிறுத்துவதை உறுதி செய்யும் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே,ஹேக் செய்யப்பட்ட நிதிகளில் பெரும்பாலானவை இன்னும் ஹேக்கரின் கணக்கில்தான் உள்ளன,” என்று ரோனின் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க மிகவும் அதிநவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்முறைகளை வரிசைப்படுத்த தங்கள் வசம் உள்ள ஒவ்வொரு வளத்தையும் பயன்படுத்துவதாக ரோனின் தெரிவித்துள்ளது. ரோனின் நிறுவனம் சட்ட அமலாக்க அதிகாரிகள், தடயவியல் கிரிப்டோகிராஃபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து அனைத்து நிதிகளும் மீட்கப்பட்டதா அல்லது திருப்பிச் செலுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்து வருவதாகவும் அதுவரை அதன் பயனாளர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய பல்வேறு அரசு நிறுவனங்களுடன் நேரடியாகச் செயல்பட்டு வருவதாகவும்,பயனர்களின் நிதிகள் இழக்கப்படாமல் இருப்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்பதை ஆக்ஸி இன்ஃபினிட்டியுடன் விவாதித்து வருவதாகவும் ரோனின் அமைப்பு தெரிவித்துள்ளது.