மேலும் அறிய

நிலக்கடலை அளவு கொண்ட பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு.. புதிர் முடிச்சை அவிழ்க்கும் விஞ்ஞானிகள்

சிக்கலான அமைப்பைக் கொண்ட  T. magnifica, பரிணாம அடுக்குகளில் காணப்படும் சில விடுபட்ட இடத்தை நிரப்பும்- விஞ்ஞானிகள்

தற்போது கண்டுபிடிக்கப்பட்டதை விட 500 மடங்கு பெரியயளவு பாக்டீரீயாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

பாக்டீரியாக்கள் வடிவிலே மிகச் சிறியவை . கண்ணுக்குப் புலப்படாத இந்த நுண்ணுயிர்களை மைக்ரோஸ்கோப்புகள் மூலம் தான் பார்க்க முடியும். நாம் பெரியவனாக் கருதப்படும் பாக்டீரியா கூட .0001 அளவு கொண்டதாகத் தான் இருக்கும். பாக்டீரியாக்களில் Pelagibacter ubique (370 முதல் 890 நேனோமீட்டர் ) என்ற வகையே  பன்மடங்கு சிறியவை என்று  கூறப்படுகிறது.

மேலும், பாக்டீரியாக்களில் ஒரே ஒரு செல்தான் இருப்பதால், அதனை ஒரு செல் உயிர் (Univellular organism) என்று அழைக்கிறோம். உணவு உண்டாக்குதல், நகர்தல், இனவிருத்தி, சுவாசித்தல் என அனைத்து செயல்பாடுகளும் இந்த ஒரு செல்லாலேயே செய்யப்படுகின்றன. மேலும், மற்ற உயிரனங்களில் இருப்பது போல், பாக்டீரியா செல்லில் திடவட்டமான நீயூக்ளியஸ் கிடையாது.  நீயூக்ளியஸ் சவ்வு, நீயூக்ளியஸ்  திரவம், குரோமோட்டின் வலை இவற்றைக் கொண்ட ஒரு பகுதி கிடையாது. செல்லின் நடுப்பகுதி சற்று அடர்த்திக் குறைவாகக் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் தான்  நீயூக்ளியஸின் முக்கியப் பொருளாகிய டி.என்.ஏ என்ற அமிலம் இருக்கிறது.     

நிலக்கடலை அளவு கொண்ட பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு.. புதிர் முடிச்சை அவிழ்க்கும் விஞ்ஞானிகள்    

இந்நிலையில், கர்பீயன் தீவு நாடுகளில் உள்ள சதுநிலக்காடுகளில், மிகவும் சிக்கலான அசாத்திய பரிணாம வளர்ச்சியைக் கொண்ட பாக்டீரியா வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இதுதொடர்பான, ஆய்வுக் கட்டுரைடை bioRxiv என்ற அறிவியல் ஆய்வு தளத்தில் விஞ்ஞானிகள் சமர்பித்துள்ளனர் ca.thomargartia magnifica என்று இதற்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரியவனாக் கருதப்படும் பாக்டீரியாக்களை விட இது 500 மடங்கு பெரியதாக இருப்பதாக (அதாவது, நிலக்கடலை அளவுக்கு) ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர்.     

 அமெரிக்காவின், மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக நுண் உயிர் இயல் விஞ்ஞானி  Verena Carvalho இதுகுறித்து கூறுகையில், " பொதுவாக மிக மிக எளிமையான அமைப்பையுடைய 'கீழ்முதல் உயிர்கள்' (Lower protista) உட்பகுதியைச் சேர்ந்த உயிரினங்களே பாக்டீரியாக்கள் என்று கருதி வந்துள்ளோம். ஆனால்,T. magnifica பாக்டீரியாக்கள் அதிக மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. மெய்க்கருவுயிரி (Eukaryote) போன்று தன் மரபணு பொருட்களை பல்வேறு செல் தொகுப்புகளாக கொண்டிருக்கிறது.

நிலக்கடலை அளவு கொண்ட பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு.. புதிர் முடிச்சை அவிழ்க்கும் விஞ்ஞானிகள்
செல் தொகுப்பு

இந்த கண்டுபிடிப்பு பல்வேறு ஆய்வுகளுக்கு இட்டுச் செல்லும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், பரிணாம அடுக்கின் அடித்தட்டில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன் உலகில் உயிர்தோன்றிய காலத்தே இவை தோன்றின. பாக்டீரியாக்களே, முதல் உயிரினங்களாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படிகிறது. எனவே, சிக்கலான அமைப்பைக் கொண்ட  T. magnifica, பரிணாம அடுக்குகளில் காணப்படும் சில விடுபட்ட இடத்தை நிரப்பும், பல விடயங்களுக்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

https://www.biorxiv.org/content/10.1101/2022.02.16.480423v1

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!

”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!

Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?

TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?

IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை

Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?

Embed widget