Saliva Pregnancy Test: எச்சில் மூலம் பெண்களுக்கு கர்ப்பத்தை சோதனை செய்யும் புதிய கருவி அறிமுகம்… எப்படி வேலை செய்யும்?
பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் முறையான சிறுநீர் அடிப்படையிலான கர்ப்ப பரிசோதனை முறைக்கு மாற்றாக தற்போது வந்துள்ள இந்த சாலிஸ்டிக் கருவி வரும் என்று கூறப்படுகின்றது.
பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அவர்களின் உமிழ்நீரில் இருந்து சொல்லும் புரட்சிகர தயாரிப்பு ஒன்று இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
சாலிஸ்டிக் கருவி
தி மெட்ரோவின் கூற்றுப்படி, 'ஸ்பிட் டெஸ்ட்' மூலம் கர்ப்பத்தை தீர்மானிக்கக்கூடிய உலகின் முதல் தயாரிப்பாக சாலிஸ்டிக் என்பது உருவாகி உள்ளது. பொதுவாக பெண்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் முறையான சிறுநீர் அடிப்படையிலான கர்ப்ப பரிசோதனை முறைக்கு மாற்றாக தற்போது வந்துள்ள இந்த சாலிஸ்டிக் கருவி வரும் என்று கூறப்படுகின்றது. இது தற்போது UK மற்றும் அயர்லாந்தில் கிடைக்கும் என்று கூறப்புகின்றது. இதன் வெற்றியை பொறுத்து மேலும் பல நாடுகளுக்கு இது பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெருசலேமைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம்
இந்த சோதனைக் கருவியை ஜெருசலேமைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான சாலிக்னோஸ்டிக்ஸ் உருவாக்கியுள்ளது. இது கோவிட் சோதனை கருவிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தனித்துவமான தயாரிப்பு எங்கும், எந்த நேரத்திலும் சோதனை செய்யும் திறனை வழங்குகிறது என்பதால், இதனை அதிகமான மக்கள் பயன்படுத்த முன் வருவார்கள் என்று தெரிகிறது. இதன் எளிமையே இதனை பல உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று தெரிகிறது, ஏனெனில் இதனை பயன்படுத்த அறைக்கோ, ஒப்பனை அறைக்கோ தனியாக செல்ல வேண்டாம், கடினமான செயல்முறைகள் இல்லை என்பதெல்லாம் பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது.
எப்படி பயன்படுத்தவேண்டும்?
இந்த சோதனையை செய்ய, பெண்கள் ஒரு தெர்மோமீட்டர் போன்ற ஒரு குச்சியை கிட்டில் இருந்து எடுத்து சில கணங்களுக்கு, அதன் நுனியை வாயில் வைக்க வேண்டும். அப்போது இது உமிழ்நீரின் மாதிரியை சேகரிக்கிறது. கோவிட் டெஸ்ட் போலவே அதனை எடுத்து ஒரு பிளாஸ்டிக் குழாய்க்கு மாற்ற வேண்டும். அதில் ஒரு உயிர்வேதியியல் எதிர்வினை நடைபெறும் என்று மெட்ரோ அறிக்கை கூறியது. இந்த சோதனையானது எச்.சி.ஜியைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் ஆகும், இது கருவை வளர்ப்பதற்கு கருப்பையைத் தயாரிக்க உதவுகிறது.
துல்லியமாக செயல்படுகிறது
சாலிஸ்டிக் மிகவும் துல்லியமான ஆரம்ப கர்ப்பக் கண்டறிதலை வழங்குகிறது என்று அதனை கண்டுபிடித்தவர்கள் கூறுகின்றனர். ஐந்து முதல் 15 நிமிடங்களுக்குள் முடிவுகளைப் கண்டறிய முடியும் என்றும், ஆரம்ப அறிகுறிகள் மூன்று நிமிடங்களுக்கு முன்பே தோன்றும் என்றும் நிறுவனம் கூறியது. ஓல்ட் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் அறிக்கையின்படி, சாலிஸ்டிக்கை கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்தைப்படுத்தப்படுவதற்கான சான்றிதழை சாலிக்னோஸ்டிக்ஸ் பெற்றுள்ளது எனத் தெரிகிறது. அமெரிக்காவில் இந்த தயாரிப்பை விற்க FDA ஒப்புதலுக்கும் விண்ணப்பித்துள்ளது. கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி அல்லாத 300 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இஸ்ரேலில் மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகு சாலிக்னோஸ்டிக்ஸ் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.