Gotapaya Rajapaksa : இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை கோட்டபய ராகபக்ச அளித்ததாக தகவல்
பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கையில் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்சே விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கையில் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்சே விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 13 தேதியிட்ட ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
President Gotabaya Rajapaksa has SIGNED the resignation letter, dated July 13 - #DailyMirror#SriLanka #SriLankaCrisis
— Jamila Husain (@Jamz5251) July 12, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணமாக அந்நாட்டில் பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களை அவர்கள் அடித்து நொறுக்கியதோடு, தீ வைத்து எரித்தனர்.
போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பித்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல, அதிபர் பதவியில் இருந்தும் கோத்தபய ராஜினாம செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம், அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. கோத்தபய ராஜபக்சே எங்கிருக்கிறார் என்ற விவரங்கள் தெரியாத நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவை அதிபர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எம்பிக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் வரும் புதன்கிழமை அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், அனைத்துக் கட்சிகள் கலந்த அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
#SriLanka:
— Meera Srinivasan (@Meerasrini) July 12, 2022
* President Gotabaya Rajapaksa's whereabouts remain unknown on what he has said would be his last day in office
* Former Fin Min Basil Rajapaksa's attempt to flee island blocked by immigration officials, local media reports #wherearethey?
இலங்கையில் புதிய அதிபரை நியமிக்கவும், புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்யவும், இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே, இலங்கையின் இடைக்கால அதிபராக போட்டியிட எஸ்ஜேபி கட்சித் தலைவர் பிரேமதாசாவை நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்