நபி சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக அரபு நாட்டுக்கு சென்ற மோடி: ஆரத்தழுவி வரவேற்ற அதிபர்
அபு தாபிக்கு சென்ற பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆற தழுவி வரவேற்றார்.
முகமது நபிகள் சர்ச்சை அரபு நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபு தாபிக்கு சென்ற பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆற தழுவி வரவேற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
كان الشيخ خليفة بن زايد آل نهيان رجل دولة يحظى باحترام كبير.وكان يعمل بدأب لما فيه صالح الشعب الإماراتي. وخلال الزيارة لأبوظبي،قدمت خالص التعازي في وفاته لصاحب السمو الشيخ محمد بن زايد آل نهيان. @MohamedBinZayed pic.twitter.com/vNMUH4BHrc
— Narendra Modi (@narendramodi) June 28, 2022
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், "அபுதாபி விமான நிலையத்தில் என்னை வரவேற்க சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வந்திருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்கு என் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு நாள் அரசு முறை பயணமாக சென்றார். பின்னர், அங்கிருந்து அவர் இந்தியா திரும்புகிறார். முகமது நபிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து தெரிவித்ததையடுத்து, அரசு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா, பாஜக நிர்வாகிகள் கருத்துகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. அதே நேரத்தில் கத்தார் மற்றும் குவைத் நாடுகள் தங்களின் இந்திய தூதர்களுக்க சம்மன் அனுப்பின. குவைத் சூப்பர் மார்க்கெட்டில் இந்திய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்தியாவில் நடைபெறும் மோதல்களுக்கு அவரின் கருத்தே காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டன.
இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், "மே மாதம் காலமான முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத்தின் மறைவுக்கு தனது அனுதாபங்களை தெரிவிப்பதற்காகவும், புதிய தலைவராக பொறுப்பேற்றதற்கு அவரின் சகோதரர் ஷேக் முகமதுவுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதற்காகவும் பிரதமர் மோடியின் வருகை அமைந்தது" என்றார்.
இரு நாடுகளும் வலுவான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 மில்லியன் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் இந்தியர்கள் ஆவர்.
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்