Amazon Tribes | என்னது கொரோனாவா? அப்டீன்னா என்ன? : ஆச்சரியமாய் கேட்ட அமேசான் மழைக்காட்டு பழங்குடிகள்..
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது தான் கொரோனா பெருந்தொற்று குறித்து அறிய வந்ததாக பழங்குடியினர் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று உலகை நாசம் செய்து வருகிறது. பெரும்பான்மை சமூகத்தினர் சமூக ஊடகம், தொலைக்காட்சி, வாட்ஸ்அப், இணையதளத்தின் வாயிலாக கொரோனாவைரஸைப் பற்றி பல்வேறு விஷயங்களை பரவி வருகின்றன.
ஆனால், பெரு நாட்டில் அடர்ந்த அமேசான் மழைக்காடுகளில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று குறித்து அறிதல் இல்லாமல் இருந்து வந்துள்ளது. சில, நாட்களுக்கு முன்பு நிர்வாக அதிகாரிகள் அங்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது தான் கொரோனா பெருந்தொற்று குறித்து அறிய வந்ததாக பழங்குடியினர் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அமேசான் மழைக்காடுகளில் Mangual என்ற கிராமத்தில் பழங்குடியினர் அதிகளவு வாழ்ந்து வருகின்றனர். பெருவின் தலைநகரில் இருந்து ராய்ட்டர்ஸ் (Reuters) செய்திசேவை பணியாளர்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் மருத்துவர்கள் படகு மூலம் மட்டுமே செல்லக்கூடிய தொலைதூர இடமான Mangual கிராமத்தை சென்றடைந்தனர்.
கொரோனா பெருந்தொற்று குறித்த எந்த அறிதலும் இந்த மக்களுக்கு இல்லை என்பதை அறிந்த இவர்கள், பின்னர் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை பேசியும் , சில காணொலிகள் மூலமாகவும் பழங்குடியினரின் மொழிகளில் பகிர்ந்து கொண்டன.
உலகம் முழுவதிலும் வாழும் பழங்குடியின சமூகங்களின் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு, சிரமப்பட்டு வருகின்றனர். மருத்துவக் கட்டமைப்புகள் போதுமான வகையில் இல்லாதால், வயிற்றுப்போக்கு, மலேரியா,கண் பாதிப்பு போன்ற பல்வேறு நோய்களில் சிக்கி வருவதாக அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளிஞ்சி மற்றும் கோடந்தூர் மலை கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
— Tirupur Talks (@TirupurTalks) August 11, 2021
தடுப்பூசி பற்றிய தங்களின் சந்தேகங்களை, தெளிவுபடுத்திக் கொண்டு அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். pic.twitter.com/n8vvhkXosw
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 8.25% பேர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாக, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள பழங்குடியின மக்கள் முன்வந்தனர். மேலும், தடுப்பூசியைப் பெறுவதற்கான அணுகலும் எளிதாக்கப்பட்டது. அதிகாரிகளும், மருத்துவப் பணியாளர்களும் அவர்கள் வாழும் இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் முடுக்கிவிட்டனர்.
முன்னதாக, ஆதரவற்ற பெண்கள் / பிச்சைக்காரர்கள் / வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க வேண்டும் என மாநில/ யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.
தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல, தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச் சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல, கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்