சிங்கப்பூரை கலக்கும் 'கேமெல்லோ' டெலிவரி ரோபோட்..
கடந்த ஓராண்டாக சிங்கப்பூர் நகரில் வலம் வருகிறது, OTSAW டிஜிட்டல் நிறுவனத்தின் காமெல்லோ டெலிவரி ரோபோட்.
சோதனையோட்டமாக கடந்த ஓராண்டாக சிங்கப்பூர் நகரில் வளம்வருகின்றது OTSAW டிஜிட்டல் நிறுவனத்தின் காமெல்லோ டெலிவரி ரோபோட். கொரோனா காலத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பான முறையில் அவர்கள் வீட்டிற்கே சென்று அளிக்க இந்த முடிவினை எடுத்ததாக OTSAW டிஜிட்டல் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
சோதனையோட்டமாக இதுவறை 600க்கும் அதிகமான டெலிவரிகளை இந்த ரோபோட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 20 கிலோ வரை இந்த ரோபோட்டால் எடுத்துச்செல்ல முடியும் என்றும் ஒரு நாளில் 4 அல்லது 5 டெலிவரிகளை இந்த ரோபோட் செய்துவருவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பிட்ட ஆப் மூலம் பொருட்களை புக் செய்தால், இந்த ரோபோட் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்துவிடும். இருப்பினும் இந்த ரோபோட்டால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் தொந்தரவு ஏற்படலாம் என்று பலரும் கருதுகின்றனர்.