North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
North Korea tests missile: அமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு எதிராக களத்தில் இறங்க தயாராகி வரும் கிம் ஜாங் உன், வட கொரியாவின் கிழக்கே உள்ள கடலில் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி சோதனை நடத்தியுள்ளது.

வெனிசுலா அதிபரை நாடு புகுந்து தூக்கிய அமெரிக்கா
உலக நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரை நிறுத்திய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். தற்போது புதிதாக போர் உருவாகுவதற்கான காரணமாக மாறியுள்ளார். ஆம், "நார்கோ-டெரரிசம்" கொகெய்ன் இறக்குமதி சதி மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுக்களை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மாடுரோ மீது அமெரிக்கா கூறிவருகிறது. இதன் காரணமாக வெனிசுலா அதிபருக்கும்- அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் (3.1.2026) இரவு நேரத்தில் வெனிசுலாவில் மின் துண்டிப்பை ஏற்படுத்திய அமெரிக்கா ராணுவம், வெனிசுலா அதிபர் மாளிகைக்குள் நுழைந்து பாதுகாவர்களை சுட்டு கொன்று விட்டு நிகோலஸ் மாடுரோவை நாடு கடத்தியது.
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வட கொரியா
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மாடுரோவை கைவிலங்கிட்டும், கண்களை கட்டியும் அமெரிக்க ராணுவம் அழைத்து வரும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சம்பவத்திற்கு ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதில் ஒரு படி மேலே சென்ற வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம், வெனிசுலா அதிபரை நாடு கடத்தியிருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல், டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார் என கிம் ஜாங் உன் எச்சரித்திருந்தார்.
மேலும் நட்பு நாடுகளுக்கு பாதிப்பு என்றால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம், உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டதாக தெரிவித்தவர், மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்களும் தயாராக உள்ளோம் என கூறியிருந்தார். இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும், எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கி குறி வைத்து தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனையை வட கொரியா சோதனை செய்துள்ளது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் சோதனையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று மேற்பார்வையிட்டுள்ளார், இது இந்த ஆண்டின் நாட்டின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. இதனை அந்த நாட்டின் அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது. இந்த ஏவுதல் பியோங்யாங்கின் அணுசக்தித் தடுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று கிம் ஜாங் உன் கூறியதாக KCNA தெரிவித்துள்ளது. வட கொரியாவின் கிழக்கே உள்ள கடலில் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தாக்கியதாகவும் அரசு ஊடகமான KCNA கூறியுள்ளது. நாட்டின் ஹைப்பர்சோனிக் ஆயுத அமைப்புகளின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டு திறனை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.





















