Actress Mumtaz: ”பூமியில் எனக்குப் பிடித்த இடம்”: மெக்காவுக்குப் பயணமாகும் மும்தாஜ் சொன்னது என்ன தெரியுமா?
மும்தாஜ் இதைக்குறித்து இன்ஸ்டாகிராம் போஸ்ட்டிலும் பேசியிருக்கிறார்
நடிகர்கள் மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் காலம் இது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் ஷாருக்கான் வரிசையில் தற்போது நடிகர் மும்தாஜ் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.
View this post on Instagram
அதுகுறித்தத் தனது பதிவில் ”அல்ஹம்துலில்லாஹ் இறுதியாக நான் பூமியில் எனக்குப் பிடித்த இடத்திற்குச் செல்கிறேன். இதனால் நான் உற்சாகத்துடன் இருக்கிறேன். மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதனை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர் ஷாருக்கானும் அண்மையில் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தார். பாலிவுட்டின் தாண்டி உலக அரங்கில் ரசிகர்களை ஈர்த்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் ’கிங் கான்’ எனப் போற்றப்படும் நடிகர் ஷாருக்கான். ’மை நேம் இஸ் கான்’ படத்தில் சராசரி வாழ்வில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசியதில் தொடங்கி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் புனிதப் பயணங்கள் மேற்கொள்வது வரை ஷாருக்கான் ஒரு இஸ்லாமியராக தனது கடமைகளை செய்து வருகிறார் ஷாருக்கான்.
View this post on Instagram
அந்த வகையில் சமீபத்தில இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு ஷாருக்கான் உம்ரா மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவுதி அரேபியாவுல் ’டங்கி’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஷாருக்கான், தன் படப்பிடிப்பு ஷெட்யூல் முடிந்து அப்படியே மெக்காவுக்கு பயணித்துள்ளார்.