Moon Soil: நிலவில் இருக்கும் மண்ணில் எரிபொருள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வில் தகவல்!
நிலவில் உள்ள மண்ணில் எரிபொருள் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீனாவைச் சேர்ந்த விஞ்ஞாணிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவில் உள்ள மண்ணில் கார்பன் -டை- ஆக்சைடு வாயுவை ஆக்ஸிஜனாக மாற்றும் திறன் கொண்ட காம்போனட்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாம் பூமியில் இருந்தாலும், எப்போதும் நிலவு பற்றிய பிரம்மிப்பும், அதன் மீதான காதலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், நிலவில் ஏராளமான ஆயுவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலவுக்கு செல்லும் அளவுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்தன. இதைதொடர்ந்து, நிலவுக்கு பயணம் செல்ல பல்வேறு பணக்காரர்கள் அதற்கான முன்னெடுப்புகளை செய்தனர். நிலவுக்குச் சுற்றுலா செல்லலாம் என்றும் பேசப்பட்டு வந்தது.
தற்போது, நிலவில் உள்ள மண் கார்பன் -டை- ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் திறன் இருக்கிறது என்று சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
Chinese scientists have given a glimpse of how soil from the moon could be used in producing oxygen and fuel to support a future lunar settlement https://t.co/iugwaspyfa
— The Times (@thetimes) May 5, 2022
சீனாவில் நான்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (Nanjing University) விஞ்ஞானிகள் யிங்ஃபாங் யாவ் (Yingfang Yao) மற்றும் ஜிகாங் சோ ஹோப் (Zhigang Zou hope) இருவரும் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை ஆய்வு செய்தனர். சேஞ் 5( Chang'e 5 spacecraft) ஏவுகணை கொண்டுவந்த மண்ணை ஆய்வு செய்த பார்த்தபோது, அதில் அயன், டைட்டேனியம் உள்ளிட்ட கனிமங்கள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை மூலம் ஆக்ஸிஜன் உருவாக்க முடியும்.
மேலும், நிலவின் மண்ணில் உள்ள கனிமங்களை ஹைட்ரஜனேற்றம் (hydrogenation) செய்வதன் மூலம் ஹைட்ரோ கார்பன்களான மீதேன் தயாரிக்கலாம். இதன் மூலம் எரிபொருள் தயாரிக்கலாம் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது.
நிலவில் உள்ள மண்ணின் தன்மை குறித்தும், அதன்மூலம் ஆக்ஸிஜன் உள்ளிட்டவைகள் உருவாக்கும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்லப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்