Crime : பேருந்தில் சென்று மாயமாகிய பெண் பேஷன் டிசைனர்..! பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை..!
நைஜீரியா நாட்டில் பெண் பேஷன் டிசைனர் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நைஜீரியா மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நாட்டைச் சேர்ந்தவர் ஒலுவாபாமிஸ் அயனோலா. அந்த நாட்டின் ஓசோடி நகரத்தில் இருந்து அவரது அண்ணன் வசித்து வரும் இடிமு நகரத்திற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறிய பேஷன் டிசைனரான அயனோலா சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்லவில்லை.
கடந்த 26-ந் தேதி மாயமாகிய அவர் யாபா நகரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது பிறப்புறுப்பு அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் சடங்கிற்காக கொல்லப்பட்டாரா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக அந்த பெண் கடைசியாக பயணம் செய்த பேருந்தை ஓட்டி வந்த 47 வயதான ஆண்ட்ரூ நைஸ் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்த அவரை போலீஸ் நேற்று கைது செய்தனர்.
உயிரிழந்த ஒலுவாபாமிஸ் பேருந்தில் ஏறிய பிறகு தனது தோழி பெலுமி என்பவரிடம் கடைசியாக பேசியுள்ளார். அப்போது, அவர் தான் பேருந்தில் பாதகாப்பாக இருப்பதை போல உணரவில்லை என்று கூறியுள்ளார். மேலும், தனது தோழியிடம் பேருந்தில் இருக்கும் வீடியோக்களையும், பேருந்தில் இருந்தவாறே வாய்ஸ் மெசேஜ்களும் அனுப்பியுள்ளார். இதனால், அவரது தோழியும் தொடர்ந்து பேருந்தில் இருந்த ஒலுவாபாமிசுக்கு பதில் மெசேஜ்கள் அனுப்பி வந்துள்ளார்.
ஒருகட்டத்திற்கு மேல் ஒலுவாபாமிசிடம் இருந்து எந்த செய்தியும் வராத காரணத்தால், அவருக்கு போன் செய்து தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதன்பிறகுதான், பேருந்தில் சென்ற ஒலுவாபாமிஸ் மாயமாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒலுவாபாமிசின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தபோது அவர் வந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனரும் தலைமறைவாகியது தெரியவந்தது. ஒலுவாபாமிசின் சடலத்தை மீட்ட பின்னர் அந்த பேருந்தை ஓட்டிய ஆண்ட்ரூம், அவருக்கு அடைக்கலம் கொடுத்த அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
22 வயதே ஆன பேஷன் டிசைனர் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு பிரபலங்கள் உள்பட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க : 2 மாதம் தாக்குபிடித்தார்.. பன்றி இதயத்தால் வாழ்ந்த நபர் மரணம்! காரணம் என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்