தோழியிடம் சீன் போடுவதற்காக 100 டாலர் டிப்ஸ்.. திரும்பி வந்து பணத்தைக் கேட்டபோது பாகம் புகட்டிய பெண்!
வெளிநாட்டில் உணவகம் ஒன்றில் 100 டாலர் டிப்சாக அளித்து பின்னர் அதை திருப்பிக் கேட்ட நபருக்கு வெயிட்ரஸ் பெண் பாடம் புகட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நட்சத்திர விடுதிகள் மற்றும் பெரிய உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவு கொண்டு வந்து அளிப்பவர்களுக்கு டிப்ஸ் தருவது வாடிக்கையான ஒரு நிகழ்வு. இந்த நிலையில், வெளிநாடு ஒன்றில் தனது தோழியை ஆச்சரியப்படுத்துவதற்காக போலியாக டிப்ஸ் அளித்து நடித்து ஏமாற்றியவர் பின்பு தனது தோழி முன் மாட்டிக்கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த உணவு கொண்டு அளிக்கும் `வெயிட்ரஸ்’ பெண் ஒன்று விளக்கமாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். தனது தோழியுடன் வந்திருந்த அந்த நபர் உண்மையில் விலையுயர்ந்த எந்த உணவையும் ஆர்டர் செய்யவில்லை. அவர் சாப்பிட்ட உணவின் மொத்த விலை 289 டாலர் ஆகும். அந்த தொகையை அவர் கிரெடிட் கார்டு மூலம் செலுத்திவிட்டார். அவர்களுக்கு உணவு கொண்டு வந்த `வெயிட்ரஸ்’க்கு 100 டாலரை டிப்ஸ் ஆக வழங்கியுள்ளார். அந்த பெண்ணும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால், இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் ரெஸ்ட்டாரண்டிற்கு வந்த அந்த நபர் அந்த வெயிட்ரஸ் பெண்ணிடம் சென்றுள்ளார். அவரிடம் எனது தோழியை ஆச்சரியப்படுத்துவதற்காகவே 100 டாலரை டிப்சாக அளித்தேன். 20 டாலரை எடுத்துக்கொண்டு மீதியை தருமாறு கேட்டுள்ளார். மேலும், பில்லையும் மாற்றித் தருமாறு கேட்டுள்ளார்.
அவருக்கு பாடம் புகட்ட நினைத்த அந்த வெயிட்ரஸ் பெண், காரில் இருந்த அவருக்கு தோழிக்கும் கேட்கும்படி உங்களது டிப்ஸ் தொகையை 100 டாலரில் இருந்து 20 டாலராக நீங்கள் கேட்டதால் மாற்றுகிறோம். ஆனால், நீங்கள் உங்கள் ரசீதை எங்களது பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று சத்தமாக கூறியுள்ளார். இதனால், டிப்சை திருப்பிக் கேட்ட நபர் மூக்கறுபடும் சூழலாக மாறியது. அவருக்கு பாடம் புகட்டிய அந்த வெயிட்ரஸ் பெண்ணை பலரும் பாராட்டியுள்ளனர்.
அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியாவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.