”மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர்தேடி...!” : மலேசிய வானத்தில் மின்னல் மழை படம்பிடித்த புகைப்படக்காரர்
40 நிமிடங்களில் எடுக்கப்பட்ட 32 தனித்தனி காட்சிகளின் தொகுப்பே அந்தப் புகைப்படம். இது கோலாலம்பூர் நகருக்கு மேலே வானத்தில் ஏற்பட்ட திடுக்கிடும் மின்னல்வெட்டுகளைப் படம்பிடித்துள்ளது.
இயற்கை ஒவ்வொரு நாளும் நம்பமுடியாத வகையிலான ஆச்சரியத்தை நமக்கு விட்டுச் செல்கிறது. அந்த வகையில் அண்மையில் மலேசியாவில் நிகழ்ந்த ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் புகைப்படக்காரர் ஒருவர் வானத்தில் நிகழ்ந்த மின்னல் வெட்டுகளைத் தொடர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அதன் அவுட்புட் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
40 நிமிடங்களில் எடுக்கப்பட்ட 32 தனித்தனி காட்சிகளின் தொகுப்பே அந்தப் புகைப்படம். இது கோலாலம்பூர் நகருக்கு மேலே வானத்தில் ஏற்பட்ட திடுக்கிடும் மின்னல்வெட்டுகளைப் படம்பிடித்துள்ளது.
"இண்டர்வெல் ஷூட் மோடில் எனது கேமிராவை அமைத்து, முடிவுகளை ஃபோட்டோஷாப் செய்து ஒன்றாக இணைத்தேன்" என்று இதனைப் புகைப்படம் எடுத்த கான் என்பவர் பிரபல செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
View this post on Instagram
வானத்தில் மின்வெட்டு ஏற்படுவது ஒன்றும் அரிதான விஷயம் இல்லை என்றாலும் இந்த வகையான புயல்போன்ற மின்வெட்டு அரிது. மேலும் மிகத் தெளிவாக இருந்த வானத்தில் இந்த மின்வெட்டு ஏற்பட்டது கூடுதல் அதிசயம் என்றார்.
நாட்டின் வெப்பமண்டல காலநிலை மற்றும் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக மலேசியாவில் மின்னல் தாக்குதல்கள் மிகவும் பொதுவான நிகழ்வாகும். அங்கே இடியுடன் கூடிய மழை அடிக்கடி நிகழும் கண்கவர் காட்சியாகும். அங்கே கிளாங் பள்ளத்தாக்கில் ஒரு வருடத்தில் சராசரியாக 240 நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
"கிளாங் பள்ளத்தாக்கு உலகின் மிக உயர்ந்த மின்னல் தாக்க அதிர்வெண்களைக் கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன்," என்று கான் தனது பேட்டியில் கூறியுள்ளார். மின்னல் என்பது புயல் மேகங்களுக்கும் தரைக்கும் இடையில் அல்லது மேகங்களுக்குள்ளேயே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் மின் வெளியேற்றம் ஆகும்.