Lowest Monetary Value Countries: இந்த 10 நாடுகளின் பணத்திற்கு உலகில் மதிப்பில்லை!
உலகத்திலேயே மிகவும் குறைவாக மதிப்பு கொண்ட 10 பணம் எவை? அவை எந்தந்த நாட்டைச் சேர்ந்தது தெரியுமா?
உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பணம் என்றால் அது அமெரிக்க டாலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏனென்றால் உலகத்தில் நிகழ்த்தப்படும் வர்த்தகத்தில் பெரும்பாலம் அமெரிக்க டாலர்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவும் தனது 86 சதவிகித இறக்குமதியை டாலர்கள் உதவியுடன் தான் செய்கிறது. அமெரிக்க டாலர் தவிர பிரிட்டிஷ் பவுண்ட், சுவிஸ் பிரான்க், யூரோ உள்ளிட்டவை உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த பணங்கள் ஆகும்.
இந்நிலையில் உலகத்திலேயே மிகவும் குறைவாக மதிப்பு கொண்ட 10 பணம் எவை? அவை எந்தந்த நாட்டைச் சேர்ந்தது தெரியுமா?
வெனிசுலாவின் போலிவர்:
வெனிசுலா நாட்டின் அதிகாரப்பூர்வ பணம் போலிவர். உலகத்தில் மதிப்பு மிகவும் குறைந்த பணம் என்றால் அது வெனிசுலாவின் போலிவர் தான். 1 அமெரிக்க டாலர் மதிப்பு வெனிசுலா நாட்டில் 15.52,540 போலிவர் ஆகும். இந்த நாட்டு பணத்தின் மதிப்பு இவ்வளவு குறைய காரணம் அங்கு ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் தான். இந்த அளவு பணமதிப்பு குறைவை சரி செய்ய அந்நாடு அரசு பெட்ரோ என்ற டிஜிட்டல் கரன்சியை கொண்டு வந்தது. அப்போதும் இந்நாட்டின் பண மதிப்பில் மாற்றம் ஏற்படவில்லை.
ஈரான் ரியால்:
வெனிசுலா போலிவருக்கு பிறகு உலகத்தில் இரண்டாவது குறைவான மதிப்பை கொண்ட பணம் ஈரான் நாட்டின் ரியால் தான். 1 அமெரிக்க டாலரின் மதிப்பு ஈரானில் 41,980 ஈரான் ரியால் ஆகும். ஈரான் நாட்டு பணத்தி மதிப்பு குறைய காரணம் அங்கு ஏற்பட்ட புரட்சி, அமெரிக்க தடைகள் மற்றும் 2018ஆம் ஆண்டு அணு உலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியற்றம் ஆகியவை ஆகும். இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையை போக்க ஈரான் நாடு டோமன் என்ற புதிய பணத்தை கடந்த மே மாதத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தியது. அதன்படி 10 ஆயிரம் ஈரான் ரியாலின் மதிப்பு ஒரு டோமன் என்று கணக்கிடப்பட்டது.
வியட்நாம் டோங்:
வியட்நாம் நாடு தனது நாட்டு பொருளாதாரத்தை சந்தை தொடர்பான பொருளாதாரமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பணத்தில் அதிகளவு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 23002 வியட்நாம் டோங் ஆகும்.
இந்தோனேஷியா ரூபியா:
இந்தோனேஷியா நாட்டின் பொருளாதாரம் சற்று வலுவாக இருந்தாலும் அந்நாட்டின் பணத்தின் மதிப்பு அந்நிய செலாவணி சந்தையில் மிகவும் குறைந்து இருக்கிறது. இதனால் 1 டாலரின் மதிப்பு 14032 இந்தோனேஷியா ரூபியா ஆகும். இந்த அந்நிய செலாவணி மதிப்பை உயர்த்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
உஸ்பெகிஸ்தானி சம்:
உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ பணம் உஸ்பெகிஸ்தானி சம். 2017ஆ ஆண்டு முதல் அந்நாட்டின் பணவியல் கொள்கையில் (மானிடரி பாலிசி) புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் அந்நிய செலாவணி சந்தையில் அந்நாட்டின் பண மதிப்பு குறைந்தது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 10,483 உஸ்பெகிஸ்தானி சம் ஆக உள்ளது.
குனியன் பிரான்க்:
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள குனியா நாட்டில் ஏற்பட்ட வறுமை மற்றும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டின் பணமான குனியன் பிரான்க் மதிப்பு குறைந்தது. இந்த நாட்டில் தங்கம், அலுமினியம், வைரம் உள்ளிட்ட இயற்கை தாதுக்கள் அங்கு இருந்தாலும் அந்நாட்டின் பண மதிப்பு மிகவும் குறைந்தே உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 10,234 குனியன் பிரான்க் ஆகும்.
சியரா லியோனின் லியோன்:
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. எபோலா வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய ஆப்பிரிக்க நாடுகள் சியரா லியோன் நாடும் ஒன்று. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 10,213 ஆக உள்ளது.
லாவோஸ் கிப்:
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள லாவோஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ பணம் லாவோஸ் கிப். இந்தப் பணத்தின் மதிப்பு அந்நிய செலாவணி சந்தையில் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த சில மாதங்களாக சற்று உயர்ந்து இருந்தாலும், அதன் மதிப்பு இன்னும் ஒரு டாலருக்கு 9,338 லாவோஸ் கிப் ஆக உள்ளது.
பராகுவே குரானி:
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள இரண்டாவது ஏழ்மையான நாடு பராகுவே. இந்த நாட்டில் இருந்து பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இது அந்நாட்டின் பொருளாதாரம் வளர போதிய உதவி செய்யவில்லை. அங்கு அதிகளவில் வேலையின்மை, குறைந்த கல்வி தரம் உள்ளிட்டவை பிரச்னைகள் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்து வருகின்றன. ஒரு டாலரின் மதிப்பு 6874 பராகுவே குரானி ஆக உள்ளது.
கம்போடியன் ரியால்:
கம்போடியா நாட்டில் 1995ஆம் ஆண்டு கம்போடியன் ரியால் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் அந்நிய செலாவணியில் இதன் மதிப்பு குறைவாக இருந்ததால் அப்போது முதல் அந்நாட்டு மக்கள் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை உபயோகிக்க ஆரம்பித்தனர். இதனால் அந்நாட்டின் பண மதிப்பு மேலும் குறைய தொடங்கியது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 4055 கம்போடியன் ரியால் ஆக உள்ளது.