மேலும் அறிய

MasterChef Australia: ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பட்டம் வென்ற இந்தியர்; கோப்பையை கொடுத்த கோழிக்கறி!

போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், 2,50,000 ஆஸ்திரேலியன் டாலர் பரிசுத்தொகையை தட்டிச் சென்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஜஸ்டின் வென்றுள்ளார்.

உலக பிரபல சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியாவின் 13வது பட்டத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயதான ஜஸ்டின் நாராயன் என்பவர் கைப்பற்றியுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், 2,50,000 ஆஸ்திரேலியன் டாலர் பரிசுத்தொகையை தட்டிச் சென்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்றுள்ளார் அவர்.

இதற்கு முன்பு, 2018-ம் ஆண்டு நடைபெற்ற மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த சஷி செல்லையா வெற்றி பெற்றிருந்தார். மிக கடுமையான போட்டியாக கருதப்படும் இந்த சமையல் நிகழ்ச்சியில், ஜஸ்டின் நாராயன் வெற்றி பெற்றதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு ஆஸ்திரேலியா பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின், தனது 13 வயதில் இருந்து சமையல் கலையில் ஆர்வம் கொண்டவராம். அவரது அப்பா, அம்மா என குடும்பம் முழுக்க இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. குக்கிங்கில், அவரது அம்மாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டவர், இந்திய உணவு வகைகளை விரும்பி சமைப்பவர்.

இந்த போட்டியில் கலந்து கொண்டது முதல், ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த அவர், இந்திய உணவு வகைகளை மட்டும் கில்லாடியாக சமைத்து நடுவர்களின் பாராட்டுகளை பெற்றிடுவார். இந்தியன் ஸ்டைல் சிக்கன் கிரேவி, சிக்கன் டாகோஸ், பிக்கிள் சாலட் ஆகியவற்றை சிறப்பாக சமைப்பவர். இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு, 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த அவர் இங்கு பின்பற்றப்படும் சமையல் முறைகளை, சமையல் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சுயமாக ஒரு ‘ஃபுட் ட்ரக்’ அமைக்கும் திட்டத்தில் இருக்கிறார் ஜஸ்டின். மேலும், இதில் கிடைக்கும் வருமானத்தை இந்தியாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வாழ்த்துகள் ஜஸ்டின்!

பிரபலமான இந்த நிகச்சியின் 13-வது பதிப்பு முடிவுக்கு வந்துள்ளது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியமில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் காணலாம். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் சமையல் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் அதிகம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, மற்ற சேனல்களிலும் சமையல் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது.

அந்த வரிசையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்த்தும் ’மாஸ்டர் செஃப்’ என்னும் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிராமப்புற நடனக்கலைஞர்களுடன் விஜய் சேதுபதி துள்ளல் ஆட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. ஆஸ்திரேலிய டிவி சீரிஸான  மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியைத் தழுவி இந்த நிகழ்ச்சி எடுக்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் கடந்த 1990ம் ஆண்டு முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக அளவில், இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இந்தியாவிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

தலைப்பு செய்திகள்

Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Anirudh Kavya: ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Anirudh Kavya: ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Embed widget