Watch Video: "அரிக்குது நான் என்ன செய்வேன்” காரில் சொறிந்து கொண்ட யானை.. எஸ்கேப் ஆன ஒட்டுநர்!
உடல் அரிப்பால் கார் பேனட்டில் உட்கார்ந்து தேய்த்தும், தன் பெரிய கால்களை காரின் டயரில் வைத்து கார் மீது ஏறவும் யானை முயற்சிக்கும் இந்த வீடியோ ஒருபுறம் சிரிப்பை வரவழைத்து கேலிக்கு ஆளாகியுள்ளது.
காடு வழியாக செல்லும் சாலைகள் பொதுவாக சவால்கள் நிறைந்தவை.
யானை செல்லும் பாதைகளில் நிச்சயம் கவனத்துடன் பயணிக்க வேண்டும். ஆனால் தனியாக செல்லும் காட்டு யானையிடம் மாட்டினால் கதை கந்தல்.
வெளிநாடு ஒன்றில் இப்படி காட்டு யானையிடம் மாட்டிய கார் படும்பாடு அடங்கிய திக் திக் வீடியோ ஒன்று முன்னதாக இணையத்தில் வெளியாகி ஒருபுறம் அதிர்ச்சியையும், மற்றொருபுறம் ட்ரோல்களையும் சம்பாதித்து வருகிறது.
Buitengebieden எனும் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் தன் உடலில் ஏற்பட்ட அரிப்பால் யானை உடலை காரில் தேய்த்துக் கொண்டுள்ளது.
What do you do when you’re itchy and you’re an elephant? 😂 pic.twitter.com/fYUMYdlO5z
— Buitengebieden (@buitengebieden) September 6, 2022
ஆனால் காரின் உள்ளே இருப்பவர்களின் நிலைமை கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உடல் அரிப்பால் கார் பேனட்டில் உட்கார்ந்து தேய்த்தும், தன் பெரிய கால்களை காரின் டயரில் வைத்து தேய்த்து கார் மீது ஏறவும் யானை முயற்சிக்கும் இந்த வீடியோ ஒருபுறம் சிரிப்பை வரவழைத்து கேலிக்கும் ஆளாகியுள்ளது.
இறுதியாக தப்பித்தோம் பிழைத்தோம் என தன் சேதாரமான காருடன் ஓட்டுநர் உயிரைக் கையில் பிடித்தபடி ஓட்டிவரும் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
இதேபோல் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.
யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.