காசாவில் மக்களை கொல்ல வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தியதா இஸ்ரேல்? சர்ச்சைக்குரிய ஆயுதத்தின் ஆபத்து என்ன?
காசா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Israel War: காசா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தரைமட்டமான காசா மருத்துவமனை:
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோதலை, ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், இஸ்ரேல் மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள் பெரும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. குறிப்பாக, அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அதுமட்டும் இன்றி, காசா நகர மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழி தாக்குதல் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்து, பாதுகாப்பு தேடி வரும் மக்கள் மீது இம்மாதிரியாக தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பகீர் குற்றச்சாட்டு:
இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது, காசா மற்றும் லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிப்பொருளை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பயன்படுத்தி வருவதாக உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புகளான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டியுள்ளன. சர்வதேச போர் விதிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன. நேரடி சாட்சியங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை மேற்கோள் காட்டி மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இப்படி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, அப்பாவி மக்களுக்கு நீண்ட கால அபாயங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது. பெரும் சர்ச்சைக்குரிய ஆபத்தான ஆயுதமாக கருதப்படும் வெள்ளை பாஸ்பரஸ் என்றால் என்ன? ராணுவம் ஏன் அதை பயன்படுத்துகிறது? என்பதை இப்போது பார்ப்போம்.
வெள்ளை பாஸ்பரஸ் என்றால் என்ன?
வெள்ளை பாஸ்பரஸ் என்பது பைரோபோரிக் (காற்றுடன் கலக்கும்போது மிக வேகமாக தீப்பற்றக்கூடிய) வேதிப்பொருள் ஆகும். ஆக்ஸிஜனுடன் சேரும் போது தீப்பிடித்து கடும் புகையுடன் வெளிப்படும். அதுமட்டும் இன்றி, 815 டிகிரி செல்சியஸ் தீவிர வெப்பத்தை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த வேதிப்பொருள் ஆகும்.
ராணுவம் ஏன் அதை பயன்படுத்துகிறது?
பீரங்கி குண்டுகள், குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளில் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது. ரசாயனத்தில் ஊறவைக்கப்பட்ட ஃபீல்ட் (ஜவுளி) குடைமிளகாய் வழியாகவும் இது வழங்கப்படலாம். துருப்புக்களின் நடமாட்டத்தை மறைத்து புகைப் படலத்தை உருவாக்கவே ராணுவம் இதை முதன்மையாக பயன்படுத்துகிறது.
மேலும் படிக்க