JAISHANKAR ON UAE: இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு உலக மாற்றத்தையே வடிவமைக்கும் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு உலக மாற்றத்தையே வடிவமைக்கும் என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் ஜெய்சங்கர்:
அபுதாபியில் உள்ள இந்திய சா்வதேச மையத்தில் ‘இந்தியா -ஐக்கிய அரபு அமீரகம்: சா்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டாளிகள்’ என்ற தலைப்பில் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்தரங்கை அமைச்சா் ஜெய்சங்கா் தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகரான அன்வர் மொகமது கர்காஸ் உடன், அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினர். அப்போது, இருநாடுக்ளுக்கு இடையேயான உறவு தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இந்தியா - ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையேயான உறவில் உள்ள சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
காலநிலை மாற்றம் தொடர்பான விவாதம்:
காலநிலை மாற்றத்தின் மீது கவனம் செலுத்தி நீண்ட விவாதத்தின் போது, முதலீடு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வது உலகின் நாடுகளின் கடமை என பேசப்பட்டது. இருநாடுகளில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டு நடவடிக்கை, சுமூகமாகவும், ஒருங்கிணைந்தும் இருநாடுகளுக்கு இடையேயான உறவை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. சில நாடுகள் உடனடியாக மாற்றத்தை ஏற்பதில்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைத்தன்மை இருப்பதை நாங்கள் நம்புவதோடு, காலநிலை மாற்றத்திற்கு காரணமான கழிவுகளை வெளிப்படுத்தாத முதல் நாடு தாங்கள் எனவும், சூரிய அற்றலில் அதிக அளவில் முதலீடு செய்து இருப்பதாகவும், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளில் காலநிலை மாற்ற மாநாடு நல்ல முடிவுகளை தரும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பங்கள் மீதான விவாதம்:
இந்தியாவின் இயற்கையான தொழில்நுட்பங்கள் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் எனவும், தொழில்நுட்ப போட்டிகள் தொடர்பாக தேசிய அளவிலான போட்டிகள் இருக்கும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். உலகமயமாக்குதலின் பேரில் பல்வேறு தரப்பினருடனும் சேர்ந்து இந்தியா பணியாற்றும் எனவும், தொழில்நுட்பம் தொடர்பான உலகளாவிய சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் குறித்து கண்காணிக்கப்படும் என்றும் கூறினார்.
இருநாடுகள் மட்டுமின்றி சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதோடு, தேசிய தரவுகள் பிரச்னையில் இந்திய நிறுவனங்கள் செய்ய வேண்டிய கடமை, தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக தற்போது உலகளவில் நிலவும் சர்ச்சைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது மற்றும் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் முன்மொழிய, அந்த இரண்டுமே அவசியம் என அமைச்சர் ஜெய்சங்கர் வழிமொழிந்தார்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவு:
இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை ரூ.82 லட்சம் கோடி மதிப்பிற்கு உயர்த்துவதே தங்களின் இலக்கு எனவும், ஏற்கனவே இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதகாவும் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கொரோனா, காலநிலை மாற்றம் மற்றும் மோதல்கள் போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மையை குறிப்பிட்டு, எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறினார். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவு தழைத்தோங்குவது மட்டுமின்றி, உலக மாற்றத்தையே வடிவமைக்கும் எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.