இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச இந்த தேதியில் நாடு திரும்ப உள்ளதாக தகவல்..
கோத்தாபய ராஜபக்ஸவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் அவரது ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாக தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வரும் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் இந்த தகவலை கூறியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச இந்த மாதம் 24ம் தேதி வருகைத் தர திட்டமிட்டிருந்த போதிலும், தான் அது குறித்து வெளியிட்ட கருத்து காரணமாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவரின் வருகை தள்ளிபோடப்பட்டதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நுகேகொடை, மிரிஹான பகுதியிலுள்ள வீட்டில் தங்குவதே, கோத்தாபய ராஜபக்ஸ மனைவியின் விருப்பம் என கூறிய அவர், கோத்தாபய ராஜபக்சவிற்கு இலங்கை அரசு உத்தியோகப்பூர்வ வீடொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஸவை அரசியலுக்குள் மீண்டும் கொண்டு வருவதற்கு அவரது சகாக்கள் முயற்சித்து வருவதாகவும் உதயங்க வீரதூங்க செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கும், பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் அவரது ஆதரவாளர்கள், நண்பர்கள் முயற்சித்து வருவதாக உதயங்க வீரதுங்க தெரிவித்திருக்கிறார்.
இருந்தபோதிலும் இதனை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவார்களா என்பது சந்தேகமே. கோத்தாபய ராஜபக்ஸவின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானோர் இணங்குவார்களா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருப்பதாக முன்னாள் தூதர் தெரிவித்திருக்கிறார்.
எனினும், கோத்தாபய ராஜபக்ஸவின் ஆழ் மனத்தில் அந்த ஆசை உள்ளது என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் . முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவை பிரதமராக்குவதற்கான முயற்சிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேற்கொண்டு வருகின்றது.
கோத்தாபய ராஜபக்ஸவை பிரமராக்குவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கின்றார். முன்னாள் அதிபர் ஏதோ ஒரு வகையில் நாடாளுமன்றத்திற்குள் சென்று , அங்கு பெரும்பான்மையினரின் ஆதரவை வென்றெடுக்கும் பட்சத்தில், அவர் பிரதமராகுவார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதர் கூறியுள்ளார் .
69 லட்சம் பேர் வாக்களித்து, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர், பிரதமராக பதவியேற்பதற்கு தாம் எதிர்ப்பு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார். ஆனால் இந்த 69 லட்சம் பேர் தான் மீண்டும் கோத்தபாய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து இறக்கி நாட்டை விட்டு துரத்தி விட்டது என்பதை பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மறந்து விட்டார்கள் போலும். முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவிற்கு இலங்கை மக்களின் ஆதரவு இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது. ஆகவே அவர் இலங்கைக்கு வந்து மீண்டும் அரசியலில் ஈடுபட முயன்றால் மக்கள் அதற்கு ஆதரவு கொடுப்பார்களா அல்லது மீண்டும் வீதிக்கு இறங்கி போராடுவார்களா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேவேளை, கோத்தாபய ராஜபக்சவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருவதற்கு அவரது சகாக்கள் முயற்சித்து வருவதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். தேசிய பட்டியல் ஊடாக கோட்டாபய ராஜபக்சவை இலங்கை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர பிரதமர் பதவி உள்ளிட்ட சில பதவிகளை வழங்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோ அல்லது அந்த கட்சியுடன் தொடர்புடையவர்களோ கோத்தபாயவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதரும் ,கோத்தபாய ராஜபக்சவின் உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.