50,000 சீன கண்டெண்ட்களை முடக்கிய கூகுள்! காரணம் என்ன?
கூகுளின் இடர் மதிப்பீட்டுக் குழு, வியாழன் அன்று, தங்கள் வலைப்பதிவு தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டது
கடந்த 12 மாதங்களில் சீனா சார்பு அக்கவுண்ட்களால் பகிரப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட கண்டெண்ட்களை கூகுள் நிறுவனம் ப்ளாக் செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து யூடியூப், பிளாகர் மற்றும் ஆட்சென்ஸ் போன்ற பல தளங்களில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளடக்கப் பொருட்களை கூகுள் தடுத்துள்ளதாக அந்த கார்ப்பரேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுளின் இடர் மதிப்பீட்டுக் குழு, வியாழன் அன்று, தங்கள் வலைப்பதிவு தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டது., சீனாவிலிருந்து பொதுவாக உள்ளடக்கங்களைப் பகிரும் ஸ்பாம்ஃப்ளாட்ஜ் ட்ராகன் மற்றும் ட்ராகன் பிரிட்ஜ் ஆகிய தளங்கள் இதை அடுத்து முற்றிலுமாக கூகுளில் இருந்து முடக்கப்பட்டுள்ளன. அவை சீனாவுக்குச் சார்பானவை என்கிற லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அமெரிக்க கண்டெண்ட்களை விட சிறந்தவை என்றும் கூறப்படுகிறது.
முடக்கப்பட்ட இந்த குழு முதன்மையாக சீன மொழி ஆடியோ அமைப்பை மையமாகக் கொண்டுள்ளது, இருப்பினும் சில விவரிப்புகள் ஆங்கிலம் மற்றும் வெவ்வேறு மொழிகளில் இருக்கும். அந்த அடிப்படையில் இது முடக்கப்பட்டுள்ளது என ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இடர் மதிப்பீட்டுக் குழுவின் (TAG) பணியானது, ஒருங்கிணைந்த தகவல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள முகவர்களுடன் சேர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களை அறிந்து அதனை எதிர்கொள்வதாகும்.
தகவல் பரிமாற்றச் சமூகத்தின் வாழ்நாளில் இதுவரை 100,000 டிராகன் பிரிட்ஜ் கணக்குகளை முடக்கி உள்ளதாக இந்த இடர் மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பணியாளர்களில் 12, 000 பேரை பணிநீக்கம் செய்வதாக ஒரு வாரத்துக்கு முன்பு அறிவித்தது. கூகுள் நிறுவன வரலாற்றில் ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஏன் என்பது குறித்து, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்திருந்தார்.
சுந்தர் பிச்சை விளக்கம்:
கூகுள் நிறுவன தலைமை மற்றும் போர்ட் உறுப்பினர்கள் உடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவை எட்டியதாக, ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மெயில் ஒன்றை அனுப்பினார். இவை நான் எடுக்க வேண்டிய முடிவுகள் என்பது முக்கியமானது. பணி நீக்கம் என்பது திடீரென செய்யப்படவில்லை. கவனமாக பரிசீலித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டது. நிறுவனத்தை சரியான பாதையில் கொண்டு செல்லவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்
8 மாத கர்ப்பிணி நீக்கம்:
பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆல்பாபெட் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான கேதரின் வாங்கும் ஒருவர். ப்ரோகிராம் மேனேஜராக பதவி வகித்த அவருக்கு இன்னும் ஒரு வாரங்களிலே பிரசவ கால விடுமுறை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.-