Google transfers: ஹேக்கருக்கு தவறுதலாக ரூ.2 கோடி அனுப்பிய கூகுள்! பணத்தை திருப்பி அனுப்பிய நேர்மை!
கூகுள் நிறுவனம் தவறுதலாக ஹேக்கர் ஒருவர் வங்கி கணக்கில் 2 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் தவறுதலாக ஹேக்கர் ஒருவரின் வங்கி கணக்கில் 2 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதை கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
”பணம் வேண்டாம் என்றாலும் பரவாயில்லை”
சைபர் செக்யூரிட்டி நிபுணரான சாம் கர்ரி, கூகுள் நிறுவனம் தனக்கு சுமார் ரூ.2 கோடி( 250,000 டாலர் ) பணத்தை செலுத்தி உள்ளதாகவும், ஏன் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பபட்டது தெரியவில்லை என்றும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் கூகுளை எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்டிருந்தார். உங்களுக்கு பணம் திரும்ப வேண்டாம் என்றாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார்
It's been a little over 3 weeks since Google randomly sent me $249,999 and I still haven't heard anything on the support ticket. Is there any way we could get in touch @Google?
— Sam Curry (@samwcyo) September 14, 2022
(it's OK if you don't want it back...) pic.twitter.com/t6f7v5erli
நன்றி தெரிவித்த கூகுள்
கூகுள் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள், தங்களது மென்பொருளில் ஏதேனும் பிழையை கண்டறிந்து தெரிவிப்பவர்களுக்கு, அதற்கான வெகுமதியை வழங்கும். இந்நிலையில் தவறுதலாக, சாம் கர்ரி என்பவரின் வங்கி கணக்கில் ரூ. 2 கோடி அனுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், பணம் தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தங்களது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளது. மேலும் ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தது.
இந்நிலையில் சைபர் செக்யூரிட்டி நிபுணரான சாம் கர்ரி, கூகுள் நிறுவனம் அனுப்பிய ரூ.2 கோடி பணத்தை திருப்பி அனுப்ப போகிறேன் என தெரிவித்துள்ளார்.
New story on NPR: He got an unexplained $250,000 payment from Google. The company says it was a mistake Sam Curry, a self-described hacker, was puzzled by the payment. A Google spokesperson says the company paid "the wrong party as the result of human error" and was working …
— Teaching Change Podcast (@teaching_change) September 16, 2022