மேலும் அறிய

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன்பு பரபரப்பு.. ரயில்களை கொளுத்தியது யார்? ஸ்தம்பித்த பிரான்ஸ்!

Paris Olympics: பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸ் முழுவதும் ரயில்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், இந்திய நேரப்படி இன்று இரவு, ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் பாரிஸ் மீது திரும்பியுள்ள நிலையில், அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோதிகள் இணைந்து நடத்திய தாக்குதலின் விளைவாக ஒட்டு மொத்த ரயில்வே போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. 

பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான ரயில்வே நிறுவனமான SNCF, இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "பாரிஸை வடக்கில் இருந்து இணைக்கும் லில்லி, மேற்கிலிருந்து இணைக்கும் போர்டாக்ஸ், கிழக்கில் இருந்து இணைக்கும் ஸ்ட்ராஸ்பேர்க் ஆகிய நகரங்களில் ரயில் பாதைகளை குறிவைத்து தீவைத்து எரித்துள்ளனர்.

அனைத்து பயணிகளும் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், வார இறுதி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். ரயில்கள் புறப்படும் இடங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அட்லாண்டிக், வடக்கு மற்றும் கிழக்கு அதிவேக ரயில் பாதைகளில் SNCF ரயில்கள் பல்வேறு வகையில் தாக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே சேதப்படுத்த வேண்டும் என தீயை வைத்து கொளுத்தியுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், ரயில்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாரிஸில் 45,000க்கும் மேற்பட்ட போலீசார், 10,000 ராணுவ வீரர்கள், 2,000 தனியார் பாதுகாப்பு ஏஜென்ட்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக தொடர்புடையதா என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இதுகுறித்து பாரிஸ் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் கூறுகையில், "இது ஒரு குற்ற செயல்" என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெரா, "இது முற்றிலும் பேரதிர்ச்சியாக உள்ளது. விளையாட்டு போட்டிகளை குறிவைப்பது பிரான்ஸை குறிவைப்பதற்கு சமம்" என்றார்.

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
Nvidia CEO: 30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்
30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
காகிதத்தில் வாக்கு… ஸ்கேனரில் வேகம்… கணினியில் கணக்கு… தேர்தல் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் அசுர பலம்!
காகிதத்தில் வாக்கு… ஸ்கேனரில் வேகம்… கணினியில் கணக்கு… தேர்தல் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் அசுர பலம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
Operation Bengaluru :’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
கந்த சஷ்டி விழாவுடன் சுபமுகூர்த்த நாள்! பழனியில் ஒரே நாளில் இத்தனை திருமணங்களா?
கந்த சஷ்டி விழாவுடன் சுபமுகூர்த்த நாள்! பழனியில் ஒரே நாளில் இத்தனை திருமணங்களா?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Chenai Powecut: சென்னை மக்கள் ரெடியா? இன்று (Nov.12) எங்கெல்லாம் மின்தடை? ஏரியா வாரியான பவர்கட் விவரங்கள்
சென்னை மக்கள் ரெடியா? இன்று (Nov.12) எங்கெல்லாம் மின்தடை? ஏரியா வாரியான பவர்கட் விவரங்கள்
Embed widget