மேலும் அறிய

FIFA 2022: ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் முதன் முறையாக 3 பெண் நடுவர்கள்!

இந்தாண்டு நடக்க இருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் முதன் முறையாக பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உலகப் புகழ் பெற்ற கால்பந்து போட்டியான ஃபிஃபா (FIFA ) உலக் கோப்பை போட்டியில் இந்தாண்டு முதல்முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்கிறார்கள்.கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனெல் மெஸ்ஸி ஆகிய இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் பங்கேற்கவிருக்கும் கடைசி உலகக்கோப்பைப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக்கு பல வரலாற்று சிறப்புகள் இருக்கிறது. போட்டிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நடத்தப்படுவது, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுவது என எல்லாம் புதிதானவை. அப்படியே, ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெண் நடுவர்கள் (refereed by a woman.) என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

வரும் நவம்பர் மாதத்தில்  ஐக்கிய அரேபிய நாடுகளில் உள்ள கத்தார் நகரத்தில் (Qatar World Cup ) போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். குறிப்பாக, இந்த முறை, போட்டிகள் கத்தார் நாட்டில் நடக்கிறது. பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில், ஆடவர் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராக பென்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு அளிக்கப்படும் இந்த அங்கீகாரம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஆண்கள் கால்பந்து போட்டிகளில் பெண் நடுவர்கள் பங்கேற்பது வழக்கமானது என்றாலும், ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் இத்தனைப் பெண்கள் நடுவர்களாகப் பணியாற்றவிருப்பது இதுவே முதல் முறை.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை கத்தார் நாட்டில் நடைபெறவிருக்கிறது.  இதில் மூன்று பெண் நடுவர்கள் மற்றும் மூன்று உதவி பெண் நடுவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்தப் போட்டியில் மொத்தம் 36 நடுவர்கள், 69 உதவி நடுவர்கள் மற்றும் 24 வீடியோ மேட்ச் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இதில் பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெஃபானி ஃப்ரப்பார்ட் (Stéphanie Frappart ), ருவாண்டாவைச் சேர்ந்த சலீமா முகான்ஸங்கா(Salima Mukansanga ), ஜப்பானைச் சேர்ந்த யோஷிமி யமாஷிடா (Yoshimi Yamashita) ஆகிய மூவரும் இந்தப் போட்டிகளில் நடுவர்களாகவும், பிரேசிலைச் சேர்ந்த நியூஸா பாக்(Neuza Back), மெக்ஸிகோவைச் சேர்ந்த டியாஸ் மெடினா(Karen Díaz Medina ), அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரீன் நெஸ்பிட் ( Kathryn Nesbitt) ஆகிய மூவரும் உதவி நடுவர்களாகக் களமிறங்குகிறார்கள்.

தரத்துக்கே முதலிடம் எனும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த நடுவர்கள் இப்போட்டியில் பங்கேற்பதாக ஃபிஃபா நடுவர்கள் கமிட்டியின் தலைவர் பியர்லூகி கோலினா கூறியிருக்கிறார்.

ஸ்டெஃபானி ஃப்ரப்பார்ட் (Stéphanie Frappart ), ருவாண்டாவைச் சேர்ந்த சலீமா முகான்ஸங்கா(Salima Mukansanga ),- இருவரும் தொடர்ந்து பல போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபிஃபாவுக்கு வாழ்த்துகள்!

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
India-EU Trade Deal: குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
Embed widget